தானா ராத்தா Tanah Rata Town Bandar Tanah Rata | |
---|---|
![]() | |
![]() | |
ஆள்கூறுகள்: 4°28′N 101°23′E / 4.467°N 101.383°E | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
உருவாக்கம் | 1885 |
மக்கள்தொகை (2010) | |
• மொத்தம் | 11,213 |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
அஞ்சல் குறியீடு | 39000 |
தொலைபேசி | 06 |
இணையதளம் | கேமரன் மலை மாவட்டக் கழக இணையத்தளம்[1] |
தானா ராத்தா (ஆங்கிலம், மலாய் மொழி: Tanah Rata) என்பது மலேசியா, பகாங், கேமரன் மலையில் உள்ள ஒரு நகரம் ஆகும். மலாய் மொழியில் "தானா ராத்தா" என்றால் தட்டையான நிலம் என்று பொருள். "தானா" என்றால் நிலம். "ராத்தா" என்றால் தட்டை. இந்த நகரம் ஒரு மலையின் உச்சியில் இருந்தாலும், அதன் பெயருக்கு ஏற்றவாறு ஒரு தட்டையான நிலைத்தில் தான் அமைந்து இருக்கிறது. இது ஒரு சுகமான சுற்றுலாத் தளம் ஆகும். எப்போதும் குளிராகவே இருக்கும்.[2]
தானா ராத்தாவில் தனியார் நிறுவனங்களுக்குச் சொந்தமான பெரும் தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. நூற்றுக்கணக்கான காய்கறித் தோட்டங்களும் உள்ளன. [3] தமிழர்களும் இங்கு கணிசமான அளவிற்கு விவசாயத் துறையில் ஈடுபட்டுள்ளனர். 2010-ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியர்களின் மக்கள்தொகை 2,699.[4]
மலேசியாவில் மிக உயரமான மலைகளில் ஒன்றான பிரிஞ்சாங் மலை (2031 மீ), தானா ராத்தா சட்டமன்றத் தொகுதியில் தான் உள்ளது. கேமரன் மலையில் ரிங்லெட், தானா ராத்தா, பிரிஞ்சாங், திரிங்காப், கோலா தெர்லா, கம்போங் ராஜா என நகரங்கள் இருந்தாலும், அவற்றுக்கு எல்லாம் முதனமை நகரமாக விளங்குவது இந்த தானா ராத்தா நகரமாகும். தவிர, கேமரன் மலையின் தலைப்பட்டணமாகவும் தலைமை வகிக்கின்றது.[5]
கேமரன் மலையின் பெரிய நகரமாகவும், சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தி பெற்ற ஒரு நகரமாகவும் விளங்கும் தானா ராத்தா, கடல் மட்டத்தில் இருந்து 1,440 மீ. (4,720 அடி) உயரத்தில் இருக்கிறது.[6] கேமரன் மலை மாவட்டக் கழகத்தின் நிர்வாக அலுவலகம் இங்கே இருப்பதால் அரசு நிர்வாகமும் இங்கே இருந்துதான் செயல்படுகிறது. அரசாங்க அலுவலகங்கள், போலீஸ் நிலையம், பொது மருத்துவமனை, மருத்துவகங்கள், அஞ்சலகம் போன்ற அனைத்து பொதுச் சேவைகள் கிடைக்கின்றன.
தானா ராத்தாவில் உள்ள ஜாலான் பெசார் பிரதான சாலையில் பல தங்கும் விடுதிகள் உள்ளன. பெரும்பாலான வங்கிகளும் தங்கள் கிளை அலுவலகங்களைத் திறந்து செயல்படுகின்றன. இங்கு இருந்து 3 கி.மீ. தொலைவில் உலகப் புகழ்பெற்ற பாரத் தேயிலத் தோட்டம் உள்ளது.[7]
காமிலியா சினேன்சிஸ் (camellia sinensis) எனும் வகையைச் சேர்ந்த தேயிலை இங்கு பயிர் செய்யப்படுகிறது. பாரத் தேயிலத் தோட்டத்திற்குச் செல்வதற்கு முன்னால், சாலை ஓரத்தில் அழகிய தேயிலைச் சிற்றுண்டியகம் உள்ளது.[8]
கேமரன் மலையில் பெரிய அளவில் தேயிலை உற்பத்தி செய்பவர்களில் பாரத் தேயிலை தோட்டம், இரண்டாவது இடம் வகிக்கிறது. கேமரன் வெளி (Cameron Valley) எனும் வணிகச்சின்னத்தில் தேயிலை உற்பத்தி செய்யப்படுகிறது. தானா ராத்தாவில் இருந்து இரண்டு கி.மீ., ரிங்லெட்டில் இருந்து ஆறு கி.மீ. தொலைவில் அந்தத் தோட்டம் இருக்கிறது. 1933-ஆம் ஆண்டு பாரத் தேயிலை தோட்டம் உருவாக்கப்பட்டது. தற்சமயம் மலேசியாவில் மட்டும் அல்ல உலக அளவிலும் இந்த பாரத் நிறுவனம் பிரசித்தி பெற்று விளங்குகிறது.[9]
இந்தியா, உத்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த சுபிரசாத் பான்சால் அகர்வால் என்பவரால் இந்த நிறுவனம் தொடங்கப் பட்டது. இப்போது பாரத் குழுமத்தில் (Bharat Group of Companies) எட்டு நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் பாரத் தேயிலை தோட்டம், உலகப் புகழ் பெற்ற நிறுவனமாக விளங்குகிறது.[10]
கேமரன் மலையின் வளமைத் ததும்பிய குன்றுச் சரிவுகளில், பாரத் தேயிலைத் தோட்ட நிறுவனத்திற்கு 1,600 ஏக்கர் நிலப்பரப்பில் நான்கு தேயிலைத் தோட்டங்கள் உள்ளன. 1933-இல் இந்த நிறுவனம் உருவாக்கப்பட்ட போது, ஒரு தனியார் தொழிற்சாலைக்கு தேயிலைகளை விற்று வந்தார்கள். தொடக்கக் காலங்களில், தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி தேயிலைக் கொழுந்துகளைப் பறித்து வந்தார்கள்.
1952-இல் டத்தோ பிரிஜிசோர் அகர்வால் என்பவர் தலைமைப் பதவியை ஏற்றார். கேமரன் மலை விவசாய ஆய்வு மையத்தில் இருந்த தேயிலைத் தொழிற்சாலை, ஒப்பந்த அடிப்படையில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன் பின்னர் சொந்தமாகப் பதனீடு செய்து பெட்டிகளில் அடைத்து காட்டு மான் ("Chop Rusa") சின்னத்தில் விநியோகம் செய்யப்பட்டது.[11]
1963-இல், பத்தாண்டுகள் கழித்து, தானா ராத்தா சாலிமார் தோட்டத்தை வாங்கி, அங்கேயே தேயிலையைப் பதனீடு செய்யும் தொழிற்சாலையையும் கட்டினார்கள். அதற்குள் பாரத் நிறுவனத்தின் தேயிலைப் பொருட்கள் நாடளாவிய நிலையில் பிரபலம் அடைந்து விட்டது. முக்கிய தேயிலை மொத்த வியாபாரிகளின் ஆதரவும் கிடைத்தது.
தேயிலை உற்பத்தியின் தரக்கட்டுப்பாடு விஷயத்தில் மிகக் கட்டுப்பாடாக இருந்ததால், கேமரன் பாரத் தோட்டங்களின் நற்பெயரும் உயர்ந்தது. மற்ற பிரபலமான தேயிலை உற்பத்தி நிறுவனங்களுடன் போட்டி போடவும் முடிந்தது.[12]
தட்பவெப்ப நிலைத் தகவல், Tanah Rata | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 20.6 (69) |
21.7 (71) |
21.7 (71) |
22.8 (73) |
22.8 (73) |
21.7 (71) |
21.7 (71) |
21.7 (71) |
21.7 (71) |
21.7 (71) |
20.6 (69) |
20.6 (69) |
21.57 (70.8) |
தினசரி சராசரி °C (°F) | 16.7 (62) |
17.2 (63) |
17.8 (64) |
18.9 (66) |
18.9 (66) |
17.8 (64) |
17.8 (64) |
17.8 (64) |
17.8 (64) |
17.8 (64) |
17.2 (63) |
17.2 (63) |
17.73 (63.9) |
தாழ் சராசரி °C (°F) | 12.8 (55) |
12.8 (55) |
13.9 (57) |
15 (59) |
15 (59) |
13.9 (57) |
13.9 (57) |
13.9 (57) |
13.9 (57) |
13.9 (57) |
13.9 (57) |
13.9 (57) |
13.89 (57) |
பொழிவு mm (inches) | 142 (5.6) |
117 (4.6) |
201 (7.9) |
290 (11.4) |
262 (10.3) |
142 (5.6) |
142 (5.6) |
173 (6.8) |
241 (9.5) |
340 (13.4) |
318 (12.5) |
224 (8.8) |
2,586 (101.8) |
ஆதாரம்: Weatherbase [13] |