தான்யா கோப் | |
---|---|
![]() | |
பிறப்பு | 11 நவம்பர் 1996 பெங்களூர் |
படித்த கல்வி நிறுவனங்கள் | வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகம் |
பணி | நடிகை, வடிவழகி |
செயற்பாட்டுக் காலம் | 2015–தற்போதும் |
தான்யா ஓப் (Tanya Hope) என்பவர் ஒரு இந்திய நடிகையும் வடிவழகியும் ஆவார். இவர் கன்னடம், தெலுங்கு, தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் 2016 ஆம் ஆண்டு திரையுலகில் அறிமுகமானார்.[1][2]
தான்யா ஓப் பெங்களூரில் பிறந்து வளர்ந்தவர்.[3] இவரது தந்தை ரவி புரவங்கர ஒரு தொழிலதிபர்.[4] இவர் தனது படிப்பை பெங்களூரில் உள்ள புனித இதயப் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி படிப்பை முடிந்தார். இங்கிலாந்தின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பைத் தொடர்ந்தார். புனேவில் உள்ள டியாரா பயிற்சி பல்கலையகத்தில் வடிவழகு பயிற்சியில் கலந்து கொண்டார். 2015 இல், இவர் பெமினா மிஸ் இந்தியா கொல்கத்தாவை வென்றார்.[5]
2016 இல் அப்பட்லோ ஒகடுண்டேவாடு என்ற தெலுங்குத் திரைப்படம் மூலம் தான்யா திரையுலகில் அறிமுகமானார். இதை தொடர்ந்து ஜெகபதி பாபு நடிப்பில் 2017 இல் வெளியான படேல் எஸ்ஐஆர் என்ற மற்றொரு தெலுங்குத் திரைப்படத்தில் ஏசிபி கேத்தரின் பாத்திரத்தில் நடித்தார். மகிழ் திருமேனி இயக்கிய தடம் திரைப்படம் தான்யா ஓப்பின் முதல் தமிழ்த் திரைப்படம். வித்யா பிரதீப், இசும்ருதி வெங்கட் ஆகிய மூன்று கதாநாயகிகளில் இவரும் ஒருவர்.[6] சுஜய் கே ஸ்ரீஹரி இயக்கத்தில் உபேந்திரா நடித்த கோம் மினிஸ்டர் என்ற கன்னடத் திரைப்படத்தில் ஜெஸ்ஸி பாத்திரத்தில் நடிக்கிறார்.[7] இவர் சந்தோசு சோபனுடன் பேப்பர் பாய் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தர்ஷனின் 51வது திரைப்படமான யஜமானா திரைப்படத்தில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தார். இவர் யஜமானா திரைப்படத்தில் "பசன்னி" பாடலுக்கு தான்யா குத்தாட்ட நடனமாடினார், இந்த திரைப்படத்தில் புகழ் பெற்ற பாடலாகும்.[8][9]
ஆண்டு | திரைப்படம் | பாத்திரம்(கள்) | மொழி(கள்) | குறிப்புகள் | மேற்கோள்கள் |
---|---|---|---|---|---|
2016 | அப்பட்லோ ஒகடுந்தேவாடு | நித்யா | தெலுங்கு | தெலுங்கு அறிமுகம் | [10] |
நேனு சைலஜா | தன்னை | தெலுங்கு | "நைட் இஸ் ஸ்டில் எங்" பாடலில் சிறப்புத் தோற்றம் | [11] | |
2017 | படேல் எஸ்.ஐ.ஆர் | ஏ. சி. பி கேத்தரின் | தெலுங்கு | [12] | |
2018 | பேப்பர் பாய் | மேகா | தெலுங்கு | [13] | |
2019 | தடம் | தீபிகா | தமிழ் | தமிழ் அறிமுகம் | [14] |
யஜமானா | கங்கை | கன்னடம் | கன்னட அறிமுகம் | [15] | |
உத்கர்ஷா | கரிச்மா | கன்னடம் | |||
அமர் | பாபி | கன்னடம் | |||
2020 | காக்கி | லாஸ்யா | கன்னடம் | ||
தாராள பிரபு | நிதி மந்தனா | தமிழ் | |||
டிஸ்கோ ராஜா | பரினீதி | தெலுங்கு | [16] | ||
2021 | இதே மா கதா | மேகனா | தெலுங்கு | [17] | |
2022 | ஹாம் அமைச்சர் | ஜெஸ்ஸி | கன்னடம் | [18] | |
2023 | கப்சா | நடனமாடுபவர் | கன்னடம் | "சும் சும் சலி சாலி" பாடலில் சிறப்புத் தோற்றம் | [12] |
குலசாமி | காயத்ரி | தமிழ் | [19] | ||
கிக் | சிவானி | தமிழ் | |||
லேபிள் | தமிழ் | ஹாட்ஸ்டார் வலைத்தொடர் | |||
வல்லான் † | ஆதியா | தமிழ் | [20] | ||
கோல்மால் † | சிவானி | தமிழ் | [21] | ||