தாபோங் | |
---|---|
Dabong District Council Majlis Daerah Dabong | |
கிளாந்தான் | |
ஆள்கூறுகள்: 5°23′N 102°01′E / 5.383°N 102.017°E | |
நாடு | மலேசியா |
மாநிலம் | கிளாந்தான் |
மாவட்டம் | கோலா கிராய் |
நகரம் | கோலா கிராய் |
உள்ளாட்சி | தாபோங் உள்ளாட்சி மன்றம் |
நேர வலயம் | மலேசிய நேரம் ஒ.ச.நே + 08:00 |
இணையதளம் | mddabong |
தாபோங் (மலாய் மொழி: Majlis Daerah Dabong; ஆங்கிலம்: Dabong District Council) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில், கோலா கிராய் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம்; ஓர் ஊராட்சி மன்றம் ஆகும். இந்த நகரம் கிளாந்தான் மாநிலத்தின் தலைநகரான கோத்தா பாரு நகரில் இருந்து சுமார் 155 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
இந்த நகருக்கு அருகில் செல்லும் கலாஸ் ஆற்றுப் பகுதியில்தான், புகழ்பெற்ற ’குவா ஈக்கான்’ எனும் மீன் குகை (Fish Cave) அமைந்துள்ளது.
இந்த நகர்ப் பகுதி வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு என நாற்புறமும் மலைகளால் சூழப்பட்டுள்ளது. தென்மேற்கில் 1422 மீட்டர் உயரத்தில் செத்தோங் மலை (Gunung Setong) உள்ளது. தாபோங் ஒரு மலைப்பாங்கான நகர்ப் பகுதி ஆகும்.
20-ஆம் நூற்றாண்டுக்கு முன்பு, அதன் முழுப் பகுதியும் வெப்பமண்டல மழைக்காடாக இருந்தது. செத்தோங் மலையில் இருந்து லெபிர் ஆறு கடந்து செல்கிறது.
லெபிர் ஆறு; கலாஸ் ஆறு ஆகிய இரு ஆறுகளும் ஒன்றிணைந்து கிளாந்தான் ஆறு (Kelantan River) எனும் ஒரு பெரிய ஆற்றை உருவாக்குகின்றன. பின்னர் இந்த கிளாந்தான் ஆறு 70 கி.மீ. வடக்கு நோக்கிப் பாய்ந்து; மாநிலத்தின் தலைநகரமான கோத்தா பாருவிற்கு அருகில் தென்சீனக் கடலில் சேர்கிறது.
2014-ஆம் ஆண்டு பா குனிங் (Bah Kuning) எனப்படும் கிளாந்தான் பெரும் வெள்ளத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நகரங்களில் தாபோங் நகரமும் ஒன்றாகும்.
கிளாந்தான் மாநிலத்தின் மேற்கு கடற்கரையில் உள்ள முக்கிய நகரங்களுடன் கோலா கிராய் பகுதிகளை இணைக்க 1920-களில் தாபோங் தொடருந்து நிலையம் உருவாக்கப்பட்டது. தாபோங் தொடருந்து நிலையத்தின் தொடருந்து பாதை கோலா கிராய் நகரத்தின் வழியாக தாபோங் நகரத்தையும் கடந்து செல்கிறது. தாபோங் நகரத்தின் மையத்தில் தாபோங் தொடருந்து நிலையம் (Dabong Railway Station) உள்ளது.[1]
அந்தக் காலக்கட்டத்தில் தாபோங் நகரின் தொடருந்து பாதையின் இரு மருங்கிலும் குடியிருப்புகள் அமைக்கப்பட்டன. சாலைகள் அமைக்கப்பட்ட பின்னர் உள்ளூர்க் கிராமங்களும் தோன்றின. 20-ஆம் நூற்றாண்டில் சாலைப் போக்குவரத்து இணைப்புகள் மேம்பட்டன. அதனால் தாபோங் நகரத்திற்கு மக்கள் அதிகமாகக் குடிபெயர்ந்தனர். வேளாண்மைக்கு தாபோங் நகரத்தில் கிடைத்த நிலங்களை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். [2]
தாபோங் ஊராட்சி மன்றத்தில் ஐந்து முக்கிம்கள் உள்ள்ன.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)