தாப்பா (P072) மலேசிய மக்களவைத் தொகுதி ![]() | |
---|---|
Tapah (P072) Federal Constituency in Perak | |
![]() | |
மாவட்டம் | பத்தாங் பாடாங் மாவட்டம் ![]() |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 61,946 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | தாப்பா தொகுதி[2] |
முக்கிய நகரங்கள் | தாப்பா, பீடோர், சுங்கை, கம்பார், செண்டிரியாங், சிலிம் ரீவர், பேராங் |
பரப்பளவு | 893 ச.கி.மீ[3] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | ![]() |
மக்களவை உறுப்பினர் | எம். சரவணன் (Saravanan Murugan) |
மக்கள் தொகை | 61,946 (2020) [4] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[5] |
தாப்பா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Tapah; ஆங்கிலம்: Tapah Federal Constituency; சீனம்: 打巴国会议席) என்பது மலேசியா, பேராக், பத்தாங் பாடாங் மாவட்டம் (Batang Padang District) மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P072) ஆகும்.[7]
தாப்பா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து தாப்பா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தாப்பா நகரம் பேராக் மாநிலத்தில் வளர்ச்சி பெற்று வரும் ஒரு நகரம். இந்த நகரம் நவீன மயமாகி வருகிறது. பல புதிய சாலைகள் இந்த நகரை அலங்கரிக்கின்றன. மேற்குப் பகுதியில் இருக்கும் தெலுக் இந்தான் நகரை இந்த நகரத்தின் புதிய நெடுஞ்சாலைகள் இணைக்கின்றன. முன்பு காலங்களில் போக்குவரவுகளுக்கு ஆறுகளே முதன்மையாக விளங்கின.
இந்த நகரத்திற்கு அருகாமையில் பீடோர், சுங்கை, கம்பார், துரோலாக் போன்ற நகரங்கள் உள்ளன. மலேசியாவில் புகழ்பெற்ற கேமரன் மலைக்குச் செல்லும் நுழைவாயிலாகவும் இந்த நகரம் அமைகின்றது. 2010-ஆம் ஆண்டுகள் வரையில், கேமரன் மலைக்குச் செல்பவர்கள், தாப்பாவில் இருந்து செல்வது வழக்கம்.
தற்போது சிம்பாங் பூலாய் நகரில் இருந்து கேமரன் மலைக்கு, புதிய இருவழி நெடுஞ்சாலை அமைக்கப்பட்டு உள்ளது. அண்மைய காலங்களில் பழைய தாப்பா பாதையைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஈப்போ மாநகரத்தில் இருந்து 60 கி.மீ. தொலைவில் தாப்பா நகரம் இருக்கிறது.
தாப்பா நகரில் இருந்து 20 கி.மீ. தொலைவில் லாத்தா கிஞ்சாங் எனும் நீர்வீழ்ச்சி இருக்கிறது. இந்த நீர்வீழ்ச்சியை அடைவதற்கு செண்டிரியாங் எனும் சிறுநகரத்தைத் தாண்டிச் செல்ல வேண்டும். இந்த நீர்வீழ்ச்சியைச் சுற்றியுள்ள காடுகளில் பழங்குடி மக்கள் வாழ்கிறார்கள். தாப்பா மலை அடிவாரக் காடுகளில் பல பழங்குடியினர் கிராமங்கள் உள்ளன.
தாப்பா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் பத்தாங் பாடாங் தொகுதியில் இருந்து தாப்பா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P066 | 1986–1990 | எம். ஜி. பண்டிதன் (M. G. Pandithan) |
பாரிசான் நேசனல் (மலேசிய இந்திய காங்கிரசு) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | கே. குமரன் (K. Kumaran) | ||
9-ஆவது மக்களவை | P069 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | எஸ். வீரசிங்கம் (S. Veerasingam ) | ||
11-ஆவது மக்களவை | P072 | 2004–2008 | ||
12-ஆவது மக்களவை | 2008–2013 | மு. சரவணன் (Saravanan Murugan) | ||
13-ஆவது மக்களவை | 2013–2018 | |||
14-ஆவது மக்களவை | 2018–2022 | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது வரையில் |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
61,946 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
45,537 | 71.81% | ▼ + 6.94% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
44,481 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
90 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
966 | ||
பெரும்பான்மை (Majority) |
5,064 | 11.38% | ![]() |
வெற்றி பெற்ற கட்சி | பாரிசான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம் [8] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
மு. சரவணன் (Saravanan Murugan) |
பாரிசான் | 44,481 | 18,398 | 41.36% | - 3.11 % ▼ | |
சரசுவதி கந்தசாமி (Saraswathy Kandasami) |
பாக்காத்தான் | - | 13,334 | 29.98% | - 12.79% ▼ | |
முகமது யாட்சா முகமது (Muhammad Yadzan Muhammad) |
பெரிக்காத்தான் | - | 12,115 | 27.24% | + 27.24% ![]() | |
மியோர் நோர் அயிதிர் சுகைமி (Mior Nor Haidir Suhaimi) |
தாயக இயக்கம் | - | 335 | 0.75% | + 0.75% ![]() | |
முகமது அக்பர் சரீப் அலி யாசின் (Mohamed Akbar Sherrif Ali Yasin) |
வாரிசான் | - | 200 | 0.45% | + 0.45% ![]() | |
எம். கதிரவன் (M Karthiravan) |
சுயேச்சை | - | 99 | 0.22% | + 0.22% ![]() |
{{cite web}}
: Check date values in: |access-date=
(help)