தாமசு பறோ (Thomas Burrow) (யூன் 29, 1909 - யூன் 8 1986), ஓர் இந்தியவியலாளரும் சமற்கிருதப் பேராசிரியரும் ஆவார். இவரது குறிப்பிடத்தக்க ஆக்கங்களுள் சில: திராவிட வேர்ச்சொல்லிலக்கண அகராதி, சமற்கிருதத்தில் சுவாவினால் ஏற்படும் கோளாறு, சமற்கிருத மொழி ஆகியன.
பறோ வடக்கு லங்காசையரின் லெக் என்னும் ஊரில் பிறந்தார். இவரது பெற்றோரான பிரான்சிசு இலியனோர் பறோ, யோசுவா இணையருக்கு ஆறாவது மகவாகப் பிறந்தார். குயின் எலிசபெத் கிராமர் பள்ளியில் படித்து கேம்பிரிட்சுப் பல்கலைக்கழகத்தின் கிறிஸ்து கல்லூரியில் சேர்ந்தார். அங்கே மொழி ஒப்பாய்வியலில் ஈடுபாடு கொண்டு சமற்கிருதம் படித்தார்.[1]