தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | தாமசு ஆக்லாந்து பிளண்டல் | |||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 1 செப்டம்பர் 1990 வெலிங்டன், நியூசிலாந்து, நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலதுகை | |||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலதுகை எதிர்ச்சுழல் | |||||||||||||||||||||||||||||||||||
பங்கு | இலக்குக் கவனிப்பாளர், மட்டையாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 273) | 1 திசம்பர் 2017 எ. மேற்கிந்தியத் தீவுகள் | |||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 10 சூன் 2021 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 196) | 5 பெப்ரவரி 2020 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 8 பெப்ரவரி 2020 எ. இந்தியா | |||||||||||||||||||||||||||||||||||
இ20ப அறிமுகம் (தொப்பி 73) | 8 சனவரி 2017 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||
கடைசி இ20ப | 8 செப்டம்பர் 2021 எ. வங்காளதேசம் | |||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||
2013–தற்போதுவரை | வெலிங்டன் துடுப்பாட்ட அணி | |||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, செப்டெம்பர் 8, 2021 |
தாமசு ஆக்லந்து பிளண்டெல் (Thomas Ackland Blundell பிறப்பு 1 செப்டம்பர் 1990) ஒரு நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் . இவர் சனவரி 2017 இல் நியூசிலாந்து துடுப்பாட்டஅணிக்காக சர்வதேச அளவில் அறிமுகமானார். இவர் வெலிங்டனுக்காக முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடுகிறார்.[1] ஏப்ரல் 2019 இல், 2019 உலகக் கிண்ணத்திற்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றார்.[2]
2010 ஆம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ணத் தொடரில் ஒரு போட்டியில் விளையாடினார்.[3] 2013 இல் முதல் தரத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார்.[3]
ஜனவரி 2017 இல் , லூக் ரோஞ்சி காயமடைந்த பிறகு, வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது போட்டிக்கான பன்னாட்டு இருபது20 போட்டியில் இலக்குக் கவனிப்பாளராக அணியில் இடம்பெற்றார்.[4] 8 சனவரி 2017 அன்று இவர் வங்காளதேசத்திற்கு எதிராக பன்னாட்டு இருபது20 போட்டியில் அறிமுகமானார்.[5]
சனவரி 2017 இல், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் அணியில் இலக்குக் கவனிப்பாளராக சேர்க்கப்பட்டார், ஆனால் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.[6] நவம்பர் 2017 இல், மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடருக்கான தேர்வுத் துடுப்பாட்ட போட்டியில் விளையாடுவதற்காக அணியில் சேர்க்கப்பட்டார். இவர் 1 டிசம்பர் 2017 அன்று மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக அறிமுகமானார்.[7] இவர் காயமடைந்த பி. ஜே. வாட்லிங்கிற்கு மாற்றாக களம் இறங்கி [8] இறுதிவரை ஆட்டமிழக்காமல் 107 ஓட்டங்கள் எடுத்தார் இதன் மூலம் அறிமுகப் போட்டியில் அதிக ஓட்டங்கள் எடுத்த நியூசிலாந்து இலக்குக் கவனிப்பாளர் எனும் சாதனை படைத்தார்.[9] 2007 ஆம் ஆண்டில் மாட் பிரியருக்குப் பிறகு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் நூறு ஓட்டங்கள் எடுத்த வீரர்ஆனார்.[10]
ஏப்ரல் 2019 இல், இவர் 2019 துடுப்பாட்ட உலகக் கிண்ணத்திற்கான அணியில் இடம் பெற்றார் .[11][12] பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை இவரை போட்டிக்கான ஐந்து ஆச்சரியத் தேர்வுகளில் ஒன்றாக பெயரிட்டது.[13] இருப்பினும், தொடரின் போது எந்தப் போட்டியிலும் இவர் விளையாடவில்லை. நியூசிலாந்துத் துடுப்பாட்ட வாரியத்தினால் 2019-20 பருவத்திற்கான புதிய ஒப்பந்தம் வழங்கப்பட்ட இருபது வீரர்களில் இவரும் ஒருவர் ஆவார்.[14]