Damal Kandalai Srinivasan | |
---|---|
பிறப்பு | 7 அக்டோபர் 1933 காஞ்சிபுரம், தமிழ்நாடு, India |
பணி | Social worker Business person |
செயற்பாட்டுக் காலம் | Since 1952 |
அறியப்படுவது | Hindu Mission Hospital, Chennai Valluvar Gurukulam Higher Secondary School |
வாழ்க்கைத் துணை | (Late)Hema Srinivasan |
பிள்ளைகள் | Two sons D.K. Hari and Dr D.K. Sriram |
விருதுகள் | பத்மசிறீ Navjeevan Puraskar Award Samskara Ratna Dr. K. V. Sarath Babu Memorial Wisdom International Award Dr. K. V. Thiruvengadam Health Care Award |
தாமல் கண்டலை சீனிவாசன் 1933 (பிறப்பு 1933) ஒரு இந்திய சமூக சேவகரும், தொழிலதிபரும், பரோபகாரரும் சென்னை இந்து மிஷன் மருத்துவமனையின் இணை நிறுவனரும் ஆவார்.[1] பர்மாவிலிருந்து வந்த அகதிகளின் குழந்தைகளுக்காக 1940 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட வள்ளுவர் குருகுலம் என்ற கல்வி நிறுவனத்தின் செயலாளராகவும் உள்ளார். இது இன்றைய வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளியாக வளர்ந்துள்ளது.[2] சமுதாயத்தில் இவரது பங்களிப்புக்காக, 2016 ஆம் ஆண்டில், இந்தியாவின் நான்காவது மிக உயர்ந்த விருதான பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[3]
சீனிவாசன், 1933 ஆம் ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி, காஞ்சிபுரத்தில்,[4] இந்திய மாநிலமான தமிழ்நாட்டில் உள்ளூர் வழக்கறிஞரான டி.கே.வரதாச்சாரி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். சென்னை இலயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றார். அதன் பிறகு சென்னைப் பல்கலைக்கழகத்திலிருந்து வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.[5] இதன் விளைவாக, வேலைக்குச் செல்வதற்கு பதிலாக, பெட்ரோலியம் மற்றும் அதிவேகமாக நுகரும் நுகர்வோர் பொருட்கள்]] துறைகளில் தனது சொந்த வியாபாரத்தை தொடங்கினார்.[6] பின்னர், சமூக சேவைக்காக தனது வணிகத்தை கைவிட்டதாக அறியப்படுகிறது.[7] மேலும், டிசம்பர் 1982 இல், தாம்பரத்தில் உள்ள ஒரு கொட்டகையில்,[8] குறைந்த நிதி வசதி உள்ளவர்களுக்கு மருத்துவ உதவி வழங்குவதற்காக ஒரு பரோபகார முயற்சியைத் தொடங்கினார்.[9]
இந்த முயற்சி, பல ஆண்டுகளாக வளர்ந்து, தற்போதைய இந்து மிஷன் மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. இவர் மருத்துவமனையின் கௌரவ செயலாளராக தொடர்ந்து பணியாற்றுகிறார்.[10] டயாலிசிஸ் போன்ற மருத்துவ வசதிகள் ஏழை நோயாளிகளுக்கு US$4 செலவில் கிடைக்கின்றன. மேலும் மருத்துவமனை இலவச கண் புரை நோய் அறுவை சிகிச்சைகள், செயற்கை மற்றும் செவிப்புலன் கருவிகளை வழங்குவதாக அறியப்படுகிறது.[9]
1940 ஆம் ஆண்டு பர்மாவிலிருந்து அகதிகளாக வரும் குழந்தைகளுக்கு கல்வி வசதிகளை வழங்குவதற்காக நிறுவப்பட்ட வள்ளுவர் குருகுலம் மேல்நிலைப் பள்ளி, சீனிவாசன் சம்பந்தப்பட்ட மற்றொரு அமைப்பாகும். மேலும் இவர் அந்த நிறுவனத்தின் கௌரவச் செயலாளராகப் பணியாற்றுகிறார்.[11][12] இவர் பல சமூக, சுகாதார மற்றும் மத அமைப்புகளின் செயல்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளார்; ஆஸ்திக சமாஜம், திருநற்பணி அறக்கட்டளை, திருமலை மிஷன் மருத்துவமனை, ராணிப்பேட்டை, தேவராஜ சுவாமி கோயில், காஞ்சிபுரம், ஸ்ரீ காயத்திரி அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா அறக்கட்டளை - டிஸ்லெக்ஸியா பள்ளி ஆகியவை அவற்றில் சில.[13] 2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையின் போது பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டு மக்களின் மறுவாழ்வுக்காக தங்குமிடங்களைக் கட்டியெழுப்பவும், சேதமடைந்த பள்ளிகளுக்கு தளபாடங்கள் மற்றும் ஆய்வக உபகரணங்களை வழங்கவும் பணியாற்றினார்.[14]
நவஜீவன் புரஸ்கார் விருது (1999), பாரத் விகாஸ் பரிஷத்தின் சம்ஸ்கார ரத்னா (2004), டாக்டர் கே.வி. சரத் பாபு மெமோரியல் விஸ்டம் இன்டர்நேஷனல் விருது (2004) மற்றும் மெட்ராஸ் ரோட்டரி கிளப்பின் டாக்டர்.கே.வி திருவேங்கடம் ஹெல்த்கேர் விருது, கிழக்கு மற்றும் செட்டிநாடு பல்கலைக்கழகத்தின் செட்டிநாடு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் விருது (2006) போன்ற பல விருதுகளைப் பெற்றவர்.[5] இந்திய அரசு இவருக்கு 2016 ஆம் ஆண்டு பத்மசிறீ விருதை வழங்கியது.
சீனிவாசனுக்கு ஹேமா என்ற மனைவியும், தம்பதிக்கு இரண்டு மகன்களும் உள்ளனர். குடும்பம் சென்னையில் வசிக்கிறது.[4]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)