![]() | |
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாமிர(II) ஆர்செனேட்டு
| |
வேறு பெயர்கள்
Copper arsenate
| |
இனங்காட்டிகள் | |
7778-41-8 ![]() | |
ChemSpider | 24279 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 26065 |
| |
பண்புகள் | |
Cu3(AsO4)2 | |
வாய்ப்பாட்டு எடை | 468.48 கி/மோல் |
தோற்றம் | நீலம் அல்லது நீலம் கலந்த பச்சை நிறத்துாள் |
அடர்த்தி | 5.2 கி/செமீ3 |
உருகுநிலை | 1,100 °C (2,010 °F; 1,370 K) |
நீரில் கரையாதது | |
கரைதிறன் | அம்மோனியாவிலும், நீர்த்தஅமிலத்திலும் கரையும் |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மிகி/மீ3 (தாமிரமாக)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 மிகி/மீ3 (தாமிரமாக)[1] |
உடனடி அபாயம்
|
TWA 100 மிகி/மீ3 (தாமிரமாக)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாமிர ஆர்செனேட்டு (Copper arsenate) Cu3(AsO4)2.4H2O, அல்லது Cu5H2(AsO4)4.2H2O), என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய வேதிச் சேர்மம் ஆகும். இது தாமிர ஆர்த்தோஆர்செனேட்டு, டிரைகாப்பர் ஆர்செனேட்டு, குப்ரிக் ஆர்செனேட்டு அல்லது டிரைகாப்பர் ஆர்த்தோஆர்செனேட்டு எனவும் அழைக்கப்படுகிறது. இது நீலம் அல்லது நீலம் கலந்த பச்சை நிறப் பொடியாகக் காணப்படுகிறது. நீர் மற்றும் ஆல்ககாலில் கரையாதது மற்றும் நீரிய அம்மோனியம் மற்றும் நீர்த்த அமிலங்களில் கரையக்கூடியது. இதன் சிஏஎசு எண் 7778-41-8 பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம் அல்லது 10103-61-4 பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம்.
தாமிர ஆர்செனேட்டு விவசாயத்தில் ஒரு பூச்சிக்கொல்லியாகப் பயன்படுகிறது. இது களைக்கொல்லியாகவும், பூஞ்சைக்கொல்லியாகவும் மற்றும் எலிக்கொல்லியாவும் கூட பயன்படுகிறது. இது நத்தை போன்ற உயிரினங்களுக்கான துாண்டில் உணவுகளில் நச்சாகப் பயன்படுகிறது.
தாமிர ஆர்செனேட்டானது தாமிர ஆர்செனைட்டுக்கான(குறிப்பாக நிறமிப் பொருள் என்ற அடிப்படையில்) பொருந்தாப் பெயராகவும் உள்ளது.
நீரற்ற தாமிர ஆர்செனேட்டானது, Cu3(AsO4)2, இயற்கையில் "லாம்மெரைட்டு"[2] என்ற கனிமமாகக் காணப்படுகிறது. தாமிர ஆர்செனேட்டு டெட்ராஐதரேட்டு, Cu3(AsO4)2.4H2O, இயற்கையில் "ரோலன்டைட்டு" என்ற கனிமமாகக் காணப்படுகிறது.[3]
தாமிர ஆர்செனேட்டு ஐதராக்சைடு அல்லது கார தாமிர ஆர்செனேட்டு (Cu(OH)AsO4) ஒரு கார வகை சேர்மமாகும். இதன் சிஏஎசு எண் 16102-92-4 பரணிடப்பட்டது 2011-09-29 at the வந்தவழி இயந்திரம். . இது இயற்கையில் ஒலிவெனைட்டு கனிமமாகக் காணப்படுகிறது. இது ஒரு பூச்சிக்கொல்லியாகவும், பூஞ்சைக்கொல்லியாகவும், மற்றும் உண்ணிக்கொல்லியாகவும் பயன்படுத்தப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு முதல் இதன் பயன்பாடு தாய்லாந்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.[4]
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)