தாமு Dhamu | |
---|---|
பிறப்பு | ஏ. வி. தாமோதரன் 31 ஆகத்து 1965 சென்னை, தமிழ்நாடு, இந்தியா |
தேசியம் | இந்தியர் |
பணி | நடிகர், நகைச்சுவை நடிகர், பலகுரல் கலைஞர் |
செயற்பாட்டுக் காலம் | 1992–2014 |
பெற்றோர் | தந்தை : ஏ.வி. விசுவநாதன் தாய் : வி.சரோஜா |
வாழ்க்கைத் துணை | சுகந்தி |
பிள்ளைகள் | சரோஜா, சுசீலா (இரட்டையர்) |
தாமு (Dhamu) என்பவர் ஓர் தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர். வானமே எல்லை என்ற தமிழ்த் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இதுவரை ஏறத்தாழ நூறு படங்கள் வரை நடித்துள்ளார். இவர் மாயக்குரல் செய்வதிலும் வல்லவர். உலக நாடுகளில் நடைபெறும் நட்சத்திரக் கலைவிழாக்களிலும் பங்கேற்று மாயக்குரலில் பேசியிருக்கிறார்.இவர் ஏழு ஆண்டுகளாக மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்களிடம் உதவியாளராக பணியாற்றினார்.திரைப்படத் துறையைத் தாண்டி கல்வித் துறையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆற்றிய சேவைகளுக்காக நடிகர் தாமுவுக்கு தேசிய கல்வி வளர்ச்சி மற்றும் ஆராய்ச்சி மையம் ( CEGR National Council) ‘ராஷ்டிரிய சிக்ஷா கவுரவ் புரஸ்கார் 2021’ தேசிய கல்வியாளருக்கான கவுரவ விருது அளித்துள்ளது[1][2][3]