பிரதம அமைச்சர் மூல்காஜி சாகிப் தாமோதர பாண்டே | |
---|---|
श्री मूलकाजी साहेब दामोदर पाँडे | |
தாமோதர பாண்டே | |
முதல் நேபாள பிரதம அமைச்சர் (மூல்காஜி) | |
மூல்காஜி | |
பதவியில் 1799–1804 | |
ஆட்சியாளர் | கீர்வான் யுத்த விக்ரம் ஷா |
பின்னவர் | ரணஜித் பாண்டே |
தலைமைப் படைத்தலைவர் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | கிபி 1752 |
இறப்பு | கிபி 1804 |
தேசியம் | நேபாளி |
பிள்ளைகள் | 5 மகன்கள்: ரணகேஸ்வர் பாண்டே, ரணபம் பாண்டே, ராணதல் பாண்டே, ராணா ஜங் பாண்டே, கரவீர பாண்டே[1] |
பெற்றோர் |
|
Military service | |
பற்றிணைப்பு | நேபாளம் |
தரம் | தலைமைப் படைத்தலைவர் |
போர்கள்/யுத்தங்கள் | சீன நேபாளப் போர் |
தாமோதர பாண்டே (Damodar Pande) (நேபாளி: दामोदर पाँडे) (1752 – மார்ச் 13, 1804) ஷா வம்ச, நேபாள இராச்சியத்தின் மன்னர் கீர்வான் யுத்த விக்ரம் ஷாவின் முதல் பிரதம அமைச்சராக, 1799 முதல் 1804 முடிய பதவி வகித்தவர்.[2]
இவரது தந்தை கலு பாண்டே, நேபாள இராச்சியத்தை நிறுவிய மன்னர் பிரிதிவி நாராயணன் ஷாவின் கஜி எனும் பதவியில் அமைச்சர் இருந்தவர். தாமோதர பாண்டே, இமயமலை சத்திரிய இனங்களில் ஒன்றான சேத்திரி பிரிவைச் சேர்ந்தவர்.
1752ல் கோர்காவில் பிறந்த தாமோதர பாண்டே, சீன - நேபாளப் போரின் போது, நேபாளப் படைத்தலைவராக பணியாற்றியவர்.[3][4][5]
நேபாள மன்னர் ராணா பகதூர் ஷாவிற்கு (ஆட்சிக் காலம்: 1777 - 1799) எதிரான மக்கள் போராட்டத்தால் வாரணாசிக்கு நாடு கடத்தப்பட்ட போது[6], சிறு குழந்தையாக இருந்த கீர்வான் யுத்த விக்ரம் ஷாவை அரியணை ஏற்றி, அவரது மெய்காப்பாளராகவும், அமைச்சராகவும் தாமோதர பாண்டே நியமிக்கப்பட்டார்.
4 மார்ச் 1804ல் முன்னாள் மன்னர் ராணா பகதூர் ஷா நேபாளம் திரும்பி, நேபாளத்தின் தலைமை அமைச்சராக (முக்தியார்) பொறுப்பேற்றார். 13 மார்ச் 1804ல் ராணா பகதூர் ஷாவின் உத்திரவுப்படி, தாமோதர பாண்டேவை தன்கோட்டில் வைத்து தலையை கொய்து கொல்லப்பட்டார்.[7]
{{citation}}
: CS1 maint: unrecognized language (link){{citation}}
: Check date values in: |date=
(help){{citation}}
: CS1 maint: unrecognized language (link)