தாம்பூர் (Tamboor ) என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்திள்ள ஒரு நகரமாகும். இது கல்கடகியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.
முந்தைய ஆண்டுகளில் தாமிரம் பெருமளவில் கிடைத்ததால் தாம்பூர் என்ற பெயர் கிராமத்திற்கு வந்தது. "தாமிர நகர்" தாம்ரூர் எனவும் பின்னர் தாம்பூர் என மாறியது.
தாம்பூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது . இங்குள்ள அடர்ந்த காடுகளில் புலிகள், புள்ளிமான்கள், யானைகள், பாம்பு மற்றும் பிற வனவிலங்குகளைக் கொண்டுள்ளன. தாம்பூர் ஏரி, சாது ஷாஹித் தர்கா, காளி நதி, அனாசி மலைக்காடுகள், சுபா அணை ஆகியவை உள்ளூர் ஆர்வமுள்ள பிற பகுதிகளாகும்.
கல்கடகியிலிருந்து , ஹூப்ளி, தார்வாடு மற்றும் எல்லாபூருக்கு தேவிகொப்பா வழியாக தினசரி மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அருகிலுள்ள இடங்கள்: கல்கடகி, தார்வாடு, ஹூப்ளி மற்றும் எல்லாபூர் .
வீர சைவ நம்பிக்கையுள்ள மக்களுக்கு தாம்பூர் ஒரு முக்கியமான யாத்திரை மையமாகும். அவர்களின் மிகவும் மதிப்பிற்குரிய பசவருக்கு இங்கு கோயில் உள்ளது. 12 ஆம் நூற்றாண்டில், சாளுக்கியர்ளும், மேலைக் கங்கர்களும் இங்கு ஆட்சி செய்தனர். தாம்பூர் கர்நாடகா முழுவதிலுமிருந்து வரும் யாத்ரீகர்களை ஒரு முக்கிய சமூகமாக ஈர்க்கின்றன அல்லது `பஞ்சம்சாலி வீர சைவர்கள்' இங்கு தவறாமல் வருகை தருகின்றன.
தம்பூர் (தம்பூர்) பசவண்ணா கோயில் [1][2] தேவ்கோப்பா வனத்தின் முடிவில் கல்கடகியில் இருந்து 11 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.