தாய் பட்டாம்பூச்சி பல்லி | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | இசுகொமாட்டா
|
குடும்பம்: | அகாமிடே
|
பேரினம்: | லியோலெபிசு
|
இனம்: | லி. திரிப்ளோயிடா
|
இருசொற் பெயரீடு | |
லியோலெபிசு திரிப்ளோயிடா பீட்டர்சு, 1971: 123 | |
வேறு பெயர்கள் | |
லியோலெபிசு திரிப்ளோயிடா - பீட்டர்சு 1971: 123 |
தாய் பட்டாம்பூச்சி பல்லி அல்லது மலேசியப் பட்டாம்பூச்சி பல்லி என்றும் அழைக்கப்படும் லியோலெபிசு திரிப்ளோயிடா (Leiolepis triploida) என்பது ஓந்திப் பல்லியின் ஒரு சிற்றினமாகும். இது முழுக்க முழுக்க பெண் (கன்னிப்பிறப்பு) உயிரிகளாக உள்ள இனமாகும். இது தெற்கு தாய்லாந்து மற்றும் தீபகற்ப மலேசியாவில் காணப்படுகிறது.[2][3]
லியோலெபிசு திரிப்ளோயிடா சுமார் 99–137 mm (3.9–5.4 அங்) நீளமுடையது. இது ஒரு மும்மரபுத்திரி சிற்றினமாகும். இது கலவியற்ற முறையில் இனப்பெருக்கம் செய்கிறது. இதன் தாய்வழி மூதாதையர் லியோலெபிசு போக்மெய் ஆகும்.[3]