This article கொண்டுள்ள மேற்கோள்கள் / சான்றுகள் அதிகமாக முதல்நிலை மூலங்களில் தங்கியுள்ளன.. (பெப்பிரவரி 2024) |
இந்த கட்டுரை சரியான விக்கித்தரவில் சேர்க்கப்படவில்லை. சரியான விக்கித்தரவில் அல்லது ஏற்கெனவே உள்ள விக்கித்தரவில் சேர்த்து உதவுங்கள். (ஏற்கெனவே உள்ள பிறமொழி விக்கிப்பீடியா விக்கித்தரவுடன் இணையுங்கள்) |
தாரா சிங் (எழுத்தாளர்) | |
---|---|
பிறப்பு | 10 அக்டோபர் 1952 |
மொழி | இந்தி |
தேசியம் | இந்தியர் |
கல்வி | கொல்கத்தா கல்லூரி |
கல்வி நிலையம் | கவிஞர், எழுத்தாளர், ஆசிரியர் |
துணைவர் | டாக்டர் பிரம்மதேவ் பிரசாத் சிங் |
பிள்ளைகள் | இரண்டு மகன்கள் |
இணையதளம் | |
இணையதளம் |
திருமதி தாரா சிங் (பிறப்பு 10 அக்டோபர் 1952) இந்தியாவைச் சேர்ந்த ஒரு இந்தி மொழி பெண் எழுத்தாளரும் கவிஞருமாவார் ஆவார்.
தனது சிறுவயதிலிருந்தே நடனம், இசை மற்றும் கவிதைகள் எழுதுவதில் சிறப்பு ஆர்வம் கொண்டிருந்த இவர், பள்ளி மற்றும் கல்லூரி வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்களில், கவிதைகள் மற்றும் இலக்கிய விவாதங்களில் பங்குகொண்டு, அந்நிகழ்ச்சிகளுக்கான பரிசுகளையும் பாராட்டுக் கடிதங்களையும் பெற்றுள்ளார்.[1]
இளங்கலையில் கல்லூரிப்படிப்பை முடித்ததோடு , கொல்கத்தா கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவரைத் திருமணமும் முடித்த இவர், தனது திருமணத்திற்கு பிறக முழு நேரத்தையும் ஆற்றலையும் இந்தி இலக்கிய சேவை புரிய அர்ப்பணித்துள்ளார். எழுதத் தொடங்கிய சிறிது காலத்திலேயே இவரது எழுத்துக்கள் ஸ்டார் தொலைக்காட்சிக் குழும நிகழ்ச்சிகளில் அங்கீகரிக்கப்பட்டதோடு, பல செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிகைகளில் தொடர்ந்து வெளி வந்துள்ளன. சமூக மற்றும் குடும்பப் பிரச்சினைகள், தனிப்பட்ட மற்றும் சமூக சுவையான உணவுகள், வாழ்க்கைத் தத்துவம் மற்றும் பிறப்பு மற்றும் இறப்பு சுழற்சிகளின் யதார்த்தம் போன்றவற்றைப் பற்றிய கட்டுரைகள், கவிதைகள் மற்றும் கதைகள் அடங்கிய புத்தகங்களைத் தொடர்ந்து வெளியிட்டுள்ளார். இதனால் விரைவிலேயே இந்தி இலக்கியத்தில் 21 ஆம் நூற்றாண்டின் நவீன "சாயாபாடி கவிஞராக" தன்னை நிலைநிறுத்திக் கொண்ட இவரது விரைவான மற்றும் குறுப்பிடத்தக்க பங்களிப்பை சுட்டிக்காட்டும். [2] [3] பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து 253 க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார் தாரா. [4]
வெளியிடப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை - 51 அதாவது:
(i) கவிதை நூல்கள் – 21
(ii) கசல் புத்தகங்கள் – 8
(iii) கதை புத்தகம் - 13
(iv) நாவல் - 6
(v) கட்டுரை புத்தகங்கள் - 2
(vi) சிறுவர் புத்தகங்கள் - 1
இது தவிர, 115 கவிதைத் தொகுப்புகள் பிற ஆசிரியர்கள் மற்றும் எழுத்தாளர்களுடன் இணைந்தும் வெளியிட்டுள்ளார்.
இவரது கட்டுரைகள் ஸ்வர்க்விபா உட்பட 29 பிரபலமான இந்தி இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளன, மேலும் 2008 ஆம் ஆண்டில் வெளியான 'சிபைஜி' என்ற இந்தி திரைப்படத்தின் தலைப்புப் பாடலாக இவரின் பாடலை வைத்துள்ளனர். இவரது 8 ஒலிப்புத்தகங்கள் (நாவல் -2, கதைப் புத்தகங்கள் -3, கவிதைப் புத்தகங்கள் -3) பல்வேறு இணையதளங்கள், ஒலி அலைவரிசை நிலையங்கள் மூலம் தொடர்ந்து ஒளிபரப்பப்பட்டு, கேட்போர் மற்றும் இலக்கிய ஆர்வலர்களிடம் சிறப்பான வரவேற்பை இன்னமும் பெற்று வருகின்றது. [5]
இந்தி இணையதளமான ஸ்வர்க்விபாவின் நிறுவனத் தலைவரான இவர் ஸ்வர்க்விபா இணைய காலாண்டு மின்னிதழின் தலைமை ஆசிரியராகவும் பணியார்றிவருகிறார். ஒவ்வொரு ஆண்டும் நம்பிக்கைக்குரிய இந்தி எழுத்தாளர்கள்/பத்திரிகையாளர்களுக்கு ஸ்வர்க்விபா தாரா விருதை இதன் மூலம் வழங்கிவரும் இவர், இந்த மின்னிதழ் மூலம் பல்வேறு படைப்புகளை பிரசுரித்தும் வருகிறார்.
பிரதாப்கர் (உத்திரப்புரதேச) சாகித்யக்,
சமஸ்கிருதிக் மற்றும் கலா சங்கம் அகாடமியின் தலைவராகவும் உள்ள இவருக்கு கவிதைகள், கஜல்கள், கதைகள், நாவல்கள் மற்றும் திரைப்படப் பாடல்கள் எழுதுவதில் மிகுந்த ஆர்வமும் உள்ளது. [6]