தாரை உந்துகை (Jet Propulsion) என்பது, செல்லும் திசைக்கு எதிர்த்திசையில் பாய்மத் தாரையை (எ-கா: காற்று, நீர்) பீய்ச்சியடிப்பதன் மூலம் நகர்ச்சி (அ) இயக்கத்தை ஏற்படுத்துவதாகும். உந்த அழிவின்மை விதியின்படி நகரும் பொருளானது தாரையின் எதிர்த்திசையில் உந்தப்படுகிறது.
பல விலங்குகள் பரிணாம வளர்ச்சி மூலம் இயற்கையான தாரை உந்துகைத் திறனைப் பெற்றுள்ளன. செயற்கையாக இச்செயல் தாரை எந்திரத்தில் கோரணி செய்யப்பட்டுள்ளது.
ரேய்னால்ட்ஸ் எண் அதிகமாக இருக்கும்போது, தாரை உந்துகை மிகச் சிறப்பாக செயல்படுகிறது; அதாவது, உந்தப்படும் பொருள் மிகப் பெரிதாகவும் அப்பொருள் செல்லும் ஊடகத்தின் பிசுக்குமை குறைவாகவும் இருக்கவேண்டும்.
தாரை உந்துகையை பயன்படுத்தும் உயிரினங்களில் துடிப்பு முறைமையில் தாரை உந்துகை சிறப்பாகப் பயன்படுத்தப்படுகிறது; தொடர்ச்சியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. (குறைந்தபட்சம், ரேய்னால்ட்ஸ் எண் 6-ஐ விட அதிகமாக இருக்கையில்).
தாரை எந்திரம் (Jet Engine) எனப்படுவது, நியூட்டனின் இயக்க விதிகளின் அடிப்படையில் செயல்படும் தாரை உந்துகையின்படி வேகமாக வெளியேறும் தாரையால் உந்துவிசையை ஏற்படுத்தும் விளைவு எந்திரம் ஆகும். தாரை எந்திரங்கள் பல வகைகளில் உள்ளன. அவற்றுள் சில: சுழல் தாரை, சுழல் விசிறி, ஏவூர்தி. பொதுவாக இவை உள் எரி பொறிகள் ஆகும்.[1] ஆயினும், எரியா-வகை தாரை எந்திரங்களும் உள்ளன.
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)