தாரோ கான் கல்லறை Tomb of Tharo Khan | |
---|---|
![]() | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | மிர்பூர் காசு, சிந்து மாகாணம் |
புவியியல் ஆள்கூறுகள் | 25°24′16.75″N 68°21′57.42″E / 25.4046528°N 68.3659500°E |
சமயம் | இசுலாம் |
மாகாணம் | சிந்து மாகாணம் |
நிலை | கல்லறை |
தாரோ கான் கல்லறை (Tomb of Tharo Khan) பாக்கித்தான் நாட்டின் சிந்து மாகாணத்திலுள்ள மிர்பூர் காசு நகரத்தில் அமைந்துள்ள தாரோ கான் தல்பூரின் கல்லறை ஆகும். இந்த கல்லறை பதினெட்டாம் நூற்றாண்டில் ஐதராபாத் நகரில் கட்டப்பட்ட தல்பூர் மிர்சு வளாகத்தின் கல்லறைகளுடன் தொடர்புடையதாகும். இவை சிந்துவின் ஆளும் தல்பூர் மிர்சுடன் தொடர்புடைய கல்லறைகள் ஆகும்.
இன்றைய தெற்கு பாக்கித்தானில் உள்ள மிர்பூர் காசின் புறநகரில் உள்ள சித்தோரி மயானத்தில் இக் கல்லறை அமைந்துள்ளது. மிர் அல்லா யார் கானின் கல்லறைக்கு மேற்கே மிர் தாரோ கானின் கல்லறை அமைந்துள்ளது.[1]
உள்புகுந்த நீரால் வளாகம் முழுவதும் அரிப்பு ஏற்பட்டு கல்லறைகள் சிதிலமடைந்த நிலையில் உள்ளன.[1]
{{cite web}}
: Check date values in: |archivedate=
(help)