தாலியா ஜெனிகுலேட்டா | |
---|---|
Thalia geniculata. | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | T. geniculata
|
இருசொற் பெயரீடு | |
Thalia geniculata L., Sp. Pl., 2: 1193, 1753 | |
வேறு பெயர்கள் [1] | |
|
தாலியா ஜெனிகுலேட்டா [2] என்பது முதலைக் கொடி (அ) நெருப்புக் கொடி என அழைக்கப்படுகிறது.[3] இச்சிற்றினத் தாவரம் ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா வெப்பமண்டலப் பகுதிகளில் பரவிக் காணப்படுகிறது.
தாலியா ஜெனிகுலேட்டாவின் தாயகம் பெரிய நிலப்பரப்பு கொண்ட ஆப்பிரிக்கா, மேற்குப்பகுதி செனிகள் முதல் கிழக்கு பகுதி சூடான் வரையிலும் தெற்கு ஜிம்பாப்வே மற்றும் அங்கோலா வரை காணப்படுகிறது. இத்தாவரம் மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, மேற்கிந்தியத் தீவு தாயகமாகவும் கருதப்படுகிறது. தென் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு அமெரிக்கா ஐக்கிய நாடுகளில் (புயூரோட்டோரிக்கோ, புளோரியா, லூசியானா, அலபாமா மற்றும் தெற்கு ஜார்ஜியா) வளர்வதாக கணக்கிடப்பட்டுள்ளது.[1][4]
லார்வா இனமான ஸ்டோலிடோப்டிரியா டாக்ஸாரா, சைலோபேன்ஸ் ஹானிமாண்ணி மற்றும் ஸ்பினார்செஸ் அனைஸோடாக்டைலஸ் தாலியா ஜெனிகுலேட்டா தாவரத்தினை உணவாக உட்கொள்வதாக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாராந்தேஸியே குடும்பத்தாவரத்தில் எடுத்துக்காட்டாக தாலியா ஜெனிகுலேட்டா தாவரத்தில் ரோஸ்மாரினிக் அமிலம் காணப்படுகிறது, [5]