தாழங்ஙாடி பள்ளி ( தாழங்ஙா மார் பசெலியோஸ் மார் கிரிகோரியஸ் ஆர்த்தடாக்ஸ் சர்ச் ). என்பது கோட்டயம் மத்திய ஆர்த்தடாக்ஸ் மறைமாவட்டத்துக்கு உட்பட்ட மலங்கரா ஆர்த்தடாக்ஸ் சிரிய தேவாலயம் ஆகும். இது கேரளத்தின், கோட்டயம் மாவட்டத்தில் கோட்டயம் குமாரகம் சாலையில் மீனாச்சில் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
சிரிய கிறிஸ்தவ பிரிவைச் சேர்ந்த ஒரு சமூகம் கி.பி 12 ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய தாழங்ஙாடியில் இருந்தது. தற்போதைய கோட்டயம் மற்றும் இடுகி மாவட்டங்களின் பெரும்பாலான பகுதிகளை உள்ளடக்கிய இராசியதை ஆண்ட தெக்கம்கூர் மன்னர்களின் தலைமையகமாக தாழங்ஙாடி இருந்தது. இராச்சியத்தின் வர்த்தக, வணிக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக, இந்த அரசர்கள் இந்த தொழில் துறைகளில் சிறந்து விளங்கிய மலங்கரா நஸ்ரானிகளின் குடியேற்றத்தை ஊக்குவித்தனர்.
மீனாச்சில் ஆற்றின் கரையில், திருச்சபைக்கு அருகிலேயே, மிகப் பழமையான, பெரிய கருங்கல் சிலுவை உள்ளது, இது இந்த தேவாலயத்தின் முன்னோடியாக கருதப்படுகிறது. சிலுவையின் அருகே ஒரு வழிபாட்டு மண்டபம் இருந்தது, ஆனால் அது ஒரு நூற்றாண்டுக்கு முன்பு மர்மமான முறையில் ஏற்பட்ட தீயினால் அழிவுற்றது. இந்த பிரார்த்தனை மண்டபத்தில் மார் பஹனன் சஹாதா ( செயிண்ட் பெஹ்னான் ) காப்பாளர் துறவியாக இருந்தார் . 20 ஆம் நூற்றாண்டில் புதிய தேவாலயம் எழுப்பப்பட்டபோது, மீனாசில் ஆற்றின் கரையில் உள்ள தேவாலயத்தின் முன்னால் உள்ள சிலுவை கோபுரத்துக்கு, மார் பஹனன் சஹாதாவின் பெயரிடப்பட்டது.