தாவர மரபியலாளர்

தாவர மரபியலாளர் (plant geneticist) என்பவர் தாவரவியல் துறையில் தாவர மரபியல் ஆய்வு செய்யும் ஒரு அறிவியலாளர் ஆவார். தாவரத்தின் தனித்தன்மை வளர்ப்பதற்கு அதன் மரபணுக் கூறுகள் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. ஒரு தாவரத்தின் தனித்தன்மையான- செடியின் உயரம், பழத்தின் சுவை, குளிரை சகிக்கும் தன்மையை கண்டறிந்து தாவர மரபியலாளர் இனப்பெருக்கத்தை பெருக்குதல் போன்ற விரும்பிய தன்மையை அடுத்த தலைமுறை தாவரங்களூக்கு கடத்துகின்றனர்.

தாவர மரபியல் நவீன மரபுவழிக் கோட்பாடுகளில் முக்கிய பங்கு வகிக்கிறது. 19ஆம் நூற்றாண்டில் பட்டாணி செடியில் கிரிகர் மெண்டலின் ஆராய்ச்சியிலும் இது முக்கியத்துவம் பெற்றது. இத்துறை உயிரித் தொழில்நுட்பத்தில் பல்வேறு முன்னேற்றங்களைக் கொண்டுவந்தது. இது தாவர இனப்பெருக்கம் மற்றும் கலப்பினத்தைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியது. வணிக ரீதியாக, தாவர மரபியல் அதிக சத்துள்ள தாவரங்களை உற்பத்தி செய்வதற்கான முறைகளை வகுத்தது. இது நுகர்வோர் விரும்பதக்க வகையில் உணவை மாற்றியமைக்கிறது.

மேற்கோள்கள்

[தொகு]