தாவரவியலின் பிரிவுகள்

தாவரவியலின் பிரிவுகள் என்பது தாவரங்களுடன் தொடர்புடைய இயற்கை அறிவியலைக் குறிக்கும். தாவரவியலின் முக்கிய பிரிவு (இதனை "தாவர அறிவியல்" என்றும் கூறலாம்) பொதுவாக மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன; முதன்மை தாவர பிரிவுகள், தாவரங்களின் வாழ்க்கைச் செயல்முறை மற்றும் அவற்றின் அடிப்படை இயற்கை நிகழ்வுகள், அவற்றின் வகைப்பாடு மற்றும் தாவரங்களின் பன்முகத்தன்மை பற்றி படிப்பது; பயன்பாட்டு தாவர பிரிவுகள் என்பது தோட்டக்கலை, வேளாண்மை மற்றும் வனவியல் துறைகளில் தாவரங்கள் எவ்வாறு பொருளாதார ரீதியாக பயன்படுகிறது என்பதைப் பற்றி படிப்பது ; உயிரிதொடர்பான தாவர பிரிவுகள் என்பது பாசிகள், மாசஸ் அல்லது பூக்கும் தாவரங்கள் போன்ற தாவர பிரிவுகளைப் பற்றி படிப்பது.

முதன்மை தாவர பிரிவுகள்

[தொகு]
  • செல்லியல் (அ) உயிரணு உயிரியல் - செல்லின் அமைப்பு, குரோமோசோம்களின் எண்ணிக்கைப் பற்றி படிப்பது
  • எபிஜெனிடிக்ஸ் - மரபணுக்களின் வெளிப்பாட்டை கட்டுப்படுத்துவதைப் பற்றி படிப்பது
  • தொல்லுயிர் தாவரவியல் - தொல்லுயிர் தாவரங்கள் மற்றும் தொல்லுயிர் தாவரங்களின் பரிணாம வளர்ச்சிப் பற்றி படிப்பது
  • மகரந்தத்தூளியல் - மகரந்தத்தூள் மற்றும் ஸ்போர்கள் பற்றி படிப்பது
  • தாவர உயிர்வேதியியல் - முதல் மற்றும் இரண்டாம் நிலை வளர்ச்சிதை மாற்ற செயல்களின் வேதிநிகழ்வுகள் பற்றி படிப்பது
  • உயிரிஆய்வியல் - விதை முளைத்தல், பூக்கள் பூத்தல் மற்றும் கனிகள் பழுத்தல் நிகழும் நேரங்களைப் பற்றி படிப்பது
  • தாவரவேதியியல் - தாவரங்களின் இரண்டாம் நிலை வேதிப்பொருட்கள் மற்றும் அவற்றின் வேதிநிகழ்வுகள் பற்றி படிப்பது
  • புவித்தாவரவியல் - தாவர உயிர்ப்புவியியல், தாவரங்களின் பரவல்நிலைப் பற்றி படிப்பது
  • தாவரசமூகவியல் - தாவர சமூகம் மற்றும் அவற்றிற்கிடையேயான இடைவினைகளைப் பற்றி படிப்பது
  • தாவர உடலமைப்பியல் - தாவர செல்களின் அமைப்பு மற்றும் திசுக்களைப் பற்றி படிப்பது
  • தாவரசூழ்நிலையியல் - சுற்றுச்சூழ்நிலையில் தாவரங்களின் பங்கு மற்றும் பணிகள் பற்றி படிப்பது
  • தாவர பரிணாமவளர்ச்சி உயிரியல் - பரிணாமங்களின் அடிப்படையில் தாவரங்களின் வளர்ச்சிப் பற்றி படிப்பது
  • தாவர மரபியல் - தாவரங்களில் மரபுப் பண்புகள் கடத்தப்படுவதைப் பற்றி படிப்பது
  • தாவர புறஅமைப்பியல் - தாவரங்களின் புற அமைப்பைப் பற்றி படிப்பது
  • தாவர உடற்செயலியல் - தாவரங்களின் வாழ்க்கைச் செயல்பாடுகளைப் பற்றி படிப்பது
  • தாவர இனப்பெருக்கவியல் - தாவரங்களின் இனப்பெருக்க செயல்பாடுகளைப் பற்றி படிப்பது
  • தாவரவகைப்பாட்டு முறைமையியல் - தாவரங்களின் வகைப்பாடு மற்றும் பெயர்ச் சூட்டுதல் முறைகளைப் பற்றி படிப்பது
  • தாவர வகைப்பாட்டியல் - தாவரங்களின் வகைப்பாடு மற்றும் பெயர்ச் சூட்டுதல் முறைகளைப் பற்றி படிப்பது

பயன்பாட்டு தாவர பிரிவுகள்

[தொகு]
  • பயிராக்கவியல் – தாவர அறிவியலில் பயிர் விளைவித்தலின் பயன்பாடு பற்றி படிப்பது
  • மரம்வளர்ப்பு கலையியல் – மரங்களை வளர்ப்பது மற்றும் அவற்றின் இனப்பெருக்கம் பற்றி படிப்பது
  • உயிரிதொழில்நுட்பவியல் – தாவரங்களைப் பயன்படுத்தி உற்பத்தி பொருட்களை உருவாக்குவது பற்றி படிப்பது
  • மரஆய்வியல் – கட்டை மரத்தாவரங்கள், புதர்ச்செடிகள், மரங்கள் மற்றும் கொடிகளைப் பற்றி படிப்பது
  • பொருளாதார தாவரவியல் – தாவரங்களின் பொருளாதார பயன்பாடு அல்லது மதிப்புகளைப் பற்றி படிப்பது
  • ஆதிவாசி தாவரவியல் – தாவரங்கள் மற்றும் மக்கள். குறிபிட்ட இனமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பயன்படுத்தப்படும் தாவர இனங்களைப் பற்றி படிப்பது
  • வனவியல் – காடுகள் மேலாண்மை மற்றும் அவை தொடர்புடைய படிப்புகளைப் பற்றி படிப்பது
  • தோட்டக்கலையியல் – தோட்டப்பயிர் தாவரங்களை வளர்ப்பு பற்றி படிப்பது
  • கடல் தாவரவியல் – கடல்நீரில் வாழும் பாசிகள் மற்றும் நீர்வாழ்த்தாவரங்கள் பற்றி படிப்பது
  • நுண்பயிர் பெருக்கம் – செல் மற்றும் திசு வளர்ப்பு பயன்படுத்தி துரித முறையில் தாவரங்கள் வளர்ப்பு பற்றி படிப்பது
  • மருந்தியல் (மரபியல்) – மரபணு மாற்றம் செய்யப்பட்ட தாவரங்களிலிருந்து பெறப்படும் மருந்து பற்றி படிப்பது
  • பயிர்பொருக்கம் – தேவையான மரபு பண்புகளைக் கொண்ட தாவரங்களை பெருக்குவது பற்றி படிப்பது
  • தாவர நோயியல் (தாவர நோயியல்) – தாவர நோய்கள் தாவரங்களில் ஏற்படும் நோய்கள் பற்றி படிப்பது
  • தாவர இனப்பெருக்கவியல் –விதைகள், தாவரக்கூழ், கிழங்குகள், வெட்டுதல் மற்றும் ஒட்டுதல் முறையின் மூலமாக தாவரங்களை இனப்பெருக்கம் செய்வதைப் பற்றி படிப்பது
  • கனியியல் – கனிகள் மற்றும் கொட்டைகளைப் பற்றி படிப்பது

உயிரிதொடர்பான தாவர பிரிவுகள்

[தொகு]
  • புல்லியல் – புற்கள் பற்றி படிப்பது
  • முட்செடி ஆய்வியல் – முட்செடிகள் பற்றி படிப்பது
  • பிரையாலஜி[1] – மாசஸ்கள், ஈரலுருத்தாவரங்கள், மற்றும் ஹார்ன்வேர்ட்ஸ் பற்றி படிப்பது
  • லைக்கனாலஜி – லைக்கன்கள் பற்றி படிப்பது
  • காளானியல் அல்லது பூசணயியல் – பூஞ்சைகள் அல்லது காளான்கள் பற்றி படிப்பது
  • ஆர்க்கிடாலஜி – ஆர்க்கிட் வகைத் தாவரங்கள் பற்றி படிப்பது
  • பாசியியல்[2] அல்லது ஆல்காலஜி – பாசிகள் பற்றி படிப்பது
  • பன்னம் – பெரணிகள் மற்றும் அதன் கூட்டத்தைப் பற்றி படிப்பது
  • ரோடாலஜி – ரோஸ் மலர்கள் பற்றி படிப்பது
  • சைனேன்திராலஜி – கம்பாசிட்டே குடும்ப தாவரங்களைப் பற்றி படிப்பது

சான்றுகள்

[தொகு]
  1. "British Bryological Society". Archived from the original on 2019-05-31. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.
  2. Harvey, William Henry. 1849. A Manual of the British Marine Algae... John van Voorst, London