இராஜதர்ம பிரவீணா சர் தி. ஆர். ஏ. தம்புச் செட்டி இந்திய சாம்ராஜ்யத்தின் ஆணை மாவட்ட நீதிபதி | |
---|---|
![]() தம்புச் செட்டி | |
பதவியில் 1879–1884 | |
தலைமை ஆளுநர் | ஆர்தர் கேவ்லாக், ஆலிவர் ரசல் பிரபு |
மைசூர் மகாராஜா ஆட்சிக்குழுவின் மூத்த உறுப்பினர் | |
பதவியில் 1881–1895 | |
ஆட்சியாளர்கள் | பத்தாம் சாமராச உடையார், நான்காம் கிருட்டிணராச உடையார் |
மைசூர் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதி | |
பதவியில் 1884–1890 | |
ஆட்சியாளர் | பத்தாம் சாமராச உடையார் |
மைசூர் தலைமை நீதிமன்றத்தின் நீதிபதி | |
பதவியில் 1890–1895 | |
ஆட்சியாளர்கள் | பத்தாம் சாமராச உடையார், நான்காம் கிருட்டிணராச உடையார் |
மைசூர் மகராணியின் ஆட்சிக் குழுவின் உறுப்பினர் | |
பதவியில் 1895–1901 | |
ஆட்சியாளர்கள் | மகாராணி கெம்பா நஞ்சம்மணி தேவி, நான்காம் கிருட்டிணராச உடையார் |
மைசூரின் திவான் பொறுப்பு | |
பதவியில் 1900 ஆகத்து 11 – 1901 மார்ச் 18 | |
ஆட்சியாளர் | நான்காம் கிருட்டிணராச உடையார் |
முன்னையவர் | சர் சேசாத்ரி ஐயர் |
பின்னவர் | சர் பி. என். கிட்டிணமூர்த்தி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | திருச்சிராப்பள்ளி இராயலு ஆரோகியசாமி தம்புச் செட்டி 1837 ஏப்ரல் திருச்சிராப்பள்ளி, சென்னை மாகாணம் |
இறப்பு | 1907 சூன் 19 பெங்களூர், மைசூர் அரசு |
தேசியம் | இந்தியன் |
துணைவர் | இராஜம்மா தம்புச் செட்டி (1848-1934) |
முன்னாள் மாணவர் | சென்னை கிறித்துவக் கல்லூரி மாநிலக் கல்லூரி, சென்னை |
பணி | அரசுப் பணியாளர், மைசூர் தலைமை நீதிமன்றத்தின் முதல் இந்திய நீதிபதி, மைசூரின் திவான் பொறுப்பு |
தொழில் | மசூரின் திவான், நீதிபதி |
சர் டி. ஆர். ஏ. தம்புச் செட்டி (T. R. A. Thumboo Chetty) (திருச்சிராப்பள்ளி ராயலு ஆரோகியசாமி தம்புச் செட்டி) (1837 ஏப்ரல் - 1907 சூன் 19) இவர், மைசூர் தலைமை நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். மேலும் திவான் விடுப்பில் சென்றபோது பல முறை அதிகாரப்பூர்வமாக திவானாகப் பணியாற்றினார். முக்கியமாக சர் கே. சேசாத்திரி ஐயருக்கு மாற்றாகப் பணியாற்றினார்..
தம்புச் செட்டி 1837இல் ஏப்ரலில் ஒரு கத்தோலிக்கக் கிறுத்துவக் குடும்பத்தில் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளியில் பிறந்தார். இவரது தந்தை, தேசாய் ராயலு செட்டி கிரிபித்சு என்ற புத்தக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். மேலும் சென்னையில் உள்ள பூர்வீக கிறிஸ்தவ சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட்டார். இவரது தாயார் கேத்தரின் அம்மா, பக்தி, மரியாதை மற்றும் அமைதியான ஒரு பெண் ஆவார். தம்புச் செட்டி தனது ஆரம்ப வாழ்க்கையை கறுப்பர் நகரத்தில் கழித்தார். இது பின்னர் சென்னையின் ஜார்ஜ் டவுன் என்று அழைக்கப்பட்டது. சென்னையில் தனது ஆரம்பக் கல்விக்குப் பின்னர், தெலுங்கு மற்றும் தமிழ் மொழிகளைக் கற்றுக்கொண்டார். பின்னர், ஆங்கிலக் கல்வியை புகழ்பெற்ற தேவாலயப் பள்ளி நிறுவனத்தில் கற்றுக் கொண்டார். பின்னர் இது சென்னை கிறித்துவக் கல்லூரி என மறுபெயரிடப்பட்டது.
இவர் தனது குடும்பத்தில் ஆறாவது குழந்தையாக இருந்தார். இவருக்கு மூன்று மூத்த சகோதரிகள் மற்றும் ஒரு தம்பி மற்றும் ஒரு சகோதரி இருந்தனர். தனது பன்னிரண்டு வயதிலேயே இவரது பெற்றோர் இறந்தனர். தம்புச் செட்டி, பொன்னுச் செட்டியார் மற்றும் சின்னாமாள் ஆகியோரின் மகள் இராஜம்மாவை மணந்தார். இவர்களுக்கு நான்கு மகன்கள் இருந்தனர்.
பள்ளியை விட்டு வெளியேறிய பிறகு, தம்புச் செட்டி முதன்முதலில் மெர்கன்டைல் நிறுவனம், மற்றும் கிரிபித்சு போன்ற நிறுவனங்களில் பயிற்சி பெற்றார். அங்கு இவரது தந்தை தேசாய் ராயலு, தலைமை புத்தகக் காவலராக பணியாற்றினார். 1855 திசம்பரில், சென்னை இராணுவ அலுவலகத்தில் எழுத்தராகவும், பின்னர் பொருளாளராகவும், இறுதியாக குறியீட்டாளராகவும் பணியாற்றினார்.
1862 ஆம் ஆண்டில், தம்புச் செட்டி முதல் சென்னை சட்டமன்றக் குழுவின் மேலாளரானார். அவர்களில் ஒரு சிறந்த வழக்கறிஞரான ஜான் டி. மைன் சட்டமன்ற செயலாளராக இருந்தார். ஜான் மைன் சென்னை மாநிலக் கல்லூரியில் சட்டப் பேராசிரியராக இருந்தபோது, தம்புச் செட்டி சட்டம் படிக்கத் தூண்டப்பட்டார். பின்னர் இவர் சட்ட வகுப்புகளில் சேர்ந்தார். மேலும் 1866 இல் நடைபெற்ற இறுதித் தேர்வில், சட்டத்தில் தேர்ச்சி பெற்று முதல் பரிசை வென்றார்.
மைசூர் ஆட்சிப்பணியில் சேருவதற்கு முன்பு, தம்புச் செட்டி 1866 ஆம் ஆண்டில் சென்னை உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பெல்லாரி, மாவட்ட நீதிமனறத்தில் நீதிபதிபதியாக இருந்தார். பின்னர், 1867 இல் பெங்களூரில் உள்ள நீதித்துறை ஆணையர் நீதிமன்றத்தின் ஆணியராக நியமிக்கப்பட்டார். 1879 ஆம் ஆண்டில், மாவட்ட மற்றும் அமர்வு நீதிபதியாக நியமிக்கப்பட்ட முதல் இந்தியரான இவர், சுமார் ஐந்து ஆண்டுகள் பாராட்டத்தக்க திறனுடன் இந்த கடமையை நிறைவேற்றினார்.
1881 ஆம் ஆண்டில் தம்புச் செட்டி மகாராஜா பத்தாம் சாமராச உடையாரின் அலுவலக மூத்த உறுப்பினராக நியமிக்கப்பட்டார் . 1884 ஆம் ஆண்டில், மைசூர் தலைமை நீதிமன்றம் அமைக்கப்பட்டபோது, இந்த நீதிமன்றம் மைசூர் இராச்சியத்தின் மேல்முறையீட்டு நீதிமன்றமாக இருந்ததால், தம்புச் செட்டி அதன் மூன்று நீதிபதிகளில் ஒருவராகவும், பின்னர் 1890 சூலையில் தலைமை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். இதன்மூலம் இவர் மைசூர் தலைமை நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதி ஆனார். இவர் 1895இல் இந்தியப் பேரரசின் மிக உயர்ந்த ஒழுங்கின் தோழராக கௌவரவிக்கப்பட்டார்.
சர் கே. சேசாத்ரி ஐயர் மகாராஜா பத்தாம் சாமராச உடையாரின் திவானாக இருந்தார். அவரது பணியின் போது, தம்புச் செட்டி 1890 இல், பின்னர் 1892 மற்றும் 1893 இல் மூன்று வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவருக்காக திவானாக பணியாற்றினார். மகாராஜா பத்தாம் சாமராச உடையார் இறந்தபோது அவரது மூத்த மகன் நான்காம் கிருட்டிணராச உடையார் சிறுவனாக இருந்ததால் தம்புச் செட்டி 1895 ஆம் ஆண்டில் கெம்பா நஞ்சம்மணி வாணி விலாச சன்னிதானத்தல் மைசூர் அரசின் ஆட்சி அமைப்பின் மூத்த உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார்.
1895 நவம்பர் 4 ஆம் தேதி தலைமை நீதிபதியாக விடுவிக்கப்பட்ட இவர் ஆட்சிக் குழுவின் முழு நேர உறுப்பினராகத் தொடர்ந்து பணியாற்றினார்.
இந்தக் காலகட்டத்தில் சேசாத்ரி ஐயர் மைசூரின் திவானாக இருந்தார். 1883 சனவரி 1 முதல் மாநிலத்தின் சேவையிலிருந்த சேசாத்ரி ஐயர், உடல்நலக்குறைவு காரணமாக, 1901 மார்ச் 18 அன்று, திவான் மற்றும் மாநில அமைப்பின் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதே தேதியில், தம்புச் செட்டிக்கும் ஓய்வு பெறுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. ஒரு எழுத்தராக பணியில் சேர்ந்து படிப்படியாக மைசூர் தலைமை நீதிமன்றத்தின் முதல் இந்திய தலைமை நீதிபதியாகவும், பிரிட்டிசு இந்தியாவின் முக்கிய மாநிலங்களில் ஒன்றான மைசூரின் திவானாகவும் இருந்தார்.