தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா என்பது 1880 ஆம் ஆண்டில் இந்தியாவில் தொடங்கப்பட்ட ஆங்கில கிழமை இதழ் ஆகும். முதலில் டைம்ஸ் ஆப் இந்தியா என்ற செய்தித்தாளின் வாரப்பதிப்பாக வெளி வந்தது. 1923 முதல் தி இல்லசுடிரேட்டட் வீக்லி ஆப் இந்தியா என்னும் பெயரில் அச்சாகி வெளி வந்தது. ஒரு நூற்றாண்டு வரலாற்றைக் கொண்டு விளங்கிய, தரமான பத்திரிகை எனக் கொண்டாடப்பட்ட இதழ் ஆகும்.[1] 1993 இல் இந்த ஆங்கில இதழ் நின்று விட்டது.
இந்த ஆங்கில இதழின் முதல் பதிப்பாசிரியர் ஏ.எஸ்.ராமன் ஆவார். எழுத்தாளர் குஷ்வந்த் சிங், எம். வி. காமத் மற்றும் பிரித்திசு நந்தி ஆகியோர் பிற்காலத்தில் ஆசிரியர்களாக இந்த இதழில் இருந்தார்கள். ஆர். கே. லட்சுமண், மரியோ மிராண்டா ஆகியோரின் கருத்துப் படங்கள் இந்த இதழில் தொடர்ந்து இடம் பெற்றன.
http://www.kamat.com/database/sources/weekly.htm காமத் இணைய தளம்