வகை | நாளிதழ் |
---|---|
வடிவம் | பிராட்ஷீட் |
உரிமையாளர்(கள்) | எக்ஸ்பிரஸ் பதிப்பகம் (மதுரை) |
தலைமை ஆசிரியர் | அதித்யா சின்ஹா |
நிறுவியது | 1932 |
மொழி | ஆங்கிலம் |
தலைமையகம் | சென்னை |
விற்பனை | 3,09,252 (தினசரி) |
OCLC எண் | 243883379 |
இணையத்தளம் | http://www.expressbuzz.com |
தி நியூ இந்தியன் எக்சுபிரசு அல்லது தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (ஆங்கிலம்: The New Indian Express) சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு பிரசுரிக்கப்படும் ஒரு ஆங்கில மொழி செய்தித்தாள். இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தால் நிர்வகிக்கப்பட்டுவரும் இச்செய்தித்தாள் 1931 இல் தொடங்கப் பட்டது. 1991 இல் இந்தியன் எக்ஸ்பிரஸ் உரிமையாளர் ராம்நாத் கோயன்காவின் மரணத்துக்குப்பின் அதன் வட இந்தியப் பதிப்புக்கள் இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும், தென்னிந்தியப் பதிப்புகள் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் என்ற பெயரிலும் இரு வேறு செய்தித்தாள்களாக வெளியாகத் தொடங்கின. தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், கேரளா போன்ற தென் மாநிலங்களில் பரவலாகப் படிக்கப்படுகிறது.[1][2][3]