தித்திவங்சா (P119) மலேசிய மக்களவைத் தொகுதி கோலாலம்பூர் | |
---|---|
Titiwangsa (P119) Federal Constituency in Kuala Lumpur | |
மாவட்டம் | மலேசியாவின் கூட்டாட்சிப் பகுதிகள் கோலாலம்பூர் |
வாக்காளர்களின் எண்ணிக்கை | 122,096 (2022)[1] |
வாக்காளர் தொகுதி | தித்திவங்சா தொகுதி |
முக்கிய நகரங்கள் | கோலாலம்பூர்; செத்தியா வங்சா, பெக்கெலிலிங், கம்போங் பாரு, புக்கிட் செத்தியா வங்சா, தித்திவங்சா ஏரிப் பூங்கா |
பரப்பளவு | 15 ச.கி.மீ[2] |
முன்னாள் தொகுதி | |
உருவாக்கப்பட்ட காலம் | 1984 |
கட்சி | பாரிசான் |
மக்களவை உறுப்பினர் | ஜொகாரி அப்துல் கனி (Johari Abdul Ghani) |
மக்கள் தொகை | 122,096 [3] |
முதல் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 1986 |
இறுதித் தேர்தல் | மலேசியப் பொதுத் தேர்தல், 2022[4] |
தித்திவங்சா மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Titiwangsa; ஆங்கிலம்: Titiwangsa Federal Constituency; சீனம்: 蒂蒂旺沙国会议席) என்பது மலேசியா, கோலாலம்பூர் கூட்டாட்சிப் பகுதியில் உள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P119) ஆகும்.
தித்திவங்சா மக்களவைத் தொகுதி 1984-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. முதன்முதலாக 1986-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக 2022-ஆம் ஆண்டில் பொதுத் தேர்தல் நடைபெற்றது.
1986-ஆம் ஆண்டில் இருந்து தித்திவங்சா மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின் மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.
தித்திவங்சா, கோலாலம்பூர் மாநகரத்தில், மேற்குப் பகுதியில் அமைந்து உள்ள ஒரு புறநகர்ப் பகுதி ஆகும். கோலாலம்பூர் மருத்துவமனை, தித்திவங்சாவுக்கு தெற்கே அமைந்துள்ளது. தித்திவங்சா மக்களவைத் தொகுதி, பெக்கெலிலிங், கம்போங் பாரு, மற்றும் டத்தோ கெராமாட் ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.
கோலாலம்பூர் மாநகரத்தின் பழைய முக்கிய்மான கட்டிடங்கள் இங்கு உள்ளன. கோலாலம்பூர் மாநகரின் வடகிழக்குப் புறநகரில் குவாந்தான் சாலையில் அமைந்துள்ள பல முக்கியப் பகுதிகளில் தித்திவங்சாவும் ஒன்றாகும். தித்திவங்சா பகுதியில் ஒரு பெரிய தித்திவங்சா ஏரிப் பூங்கா உள்ளது. பிரித்தானிய ஆட்சியின் கீழ் இங்கு ஈயச் சுரங்க நடவடிக்கைகள் அதிகமாக நடைபெற்றன. பின்னர் அந்த ஈயக் குட்டைகள் சுத்தம் செய்யப்பட்டு ஒரு பெரிய பூங்காவாக மாற்றப்பட்டன.[5]
தித்திவங்சா மக்களவைத் தொகுதியின் உறுப்பினர்கள் (1986 - 2022) | ||||
---|---|---|---|---|
மக்களவை | தொகுதி | ஆண்டுகள் | உறுப்பினர் | கட்சி |
1984-ஆம் ஆண்டில் செதாபாக் மக்களவைத் தொகுதியில் இருந்து தித்திவங்சா தொகுதி உருவாக்கப்பட்டது | ||||
7-ஆவது மக்களவை | P098 | 1986–1990 | சுலைமான் முகமட் (Suleiman Mohamed) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
8-ஆவது மக்களவை | 1990–1995 | |||
9-ஆவது மக்களவை | P107 | 1995–1999 | ||
10-ஆவது மக்களவை | 1999–2004 | |||
11-ஆவது மக்களவை | P119 | 2004–2008 | அசுதமான் அப்துல் அசீசு (Astaman Abdul Aziz) | |
12-ஆவது மக்களவை | 2008–2011 | லோ லோ முகமட் கசாலி (Lo' Lo' Mohamad Ghazali) |
பாக்காத்தான் ராக்யாட் (பாஸ்) | |
2011–2013 | காலி[N 1] | |||
13-ஆவது மக்களவை | 2013–2018 | ஜொகாரி அப்துல் கனி (Johari Abdul Ghani) |
பாரிசான் நேசனல் (அம்னோ) | |
14-ஆவது மக்களவை | 2018–2020 | ரீனா அருண் (Rina Harun) |
பாக்காத்தான் (பெர்சத்து) | |
2020–2022 | பெரிக்காத்தான் (பெர்சத்து) | |||
15-ஆவது மக்களவை | 2022–தற்போது | ஜொகாரி அப்துல் கனி (Johari Abdul Ghani) |
பாரிசான் நேசனல் (அம்னோ) |
பொது | வாக்குகள் | % | ∆% |
---|---|---|---|
பதிவு பெற்ற வாக்காளர்கள் (Registered Electors) |
80,747 | ||
வாக்களித்தவர்கள் (Turnout) |
61,450 | 76.10% | ▼ -6.46% |
செல்லுபடி வாக்குகள் (Total Valid Votes) |
60,858 | 100.00% | |
கிடைக்காத அஞ்சல் வாக்குகள் (Unreturned Ballots) |
235 | ||
செல்லாத வாக்குகள் (Total Rejected Ballots) |
357 | ||
பெரும்பான்மை (Majority) |
4,632 | 7.61% | ▼ -0.60% |
வெற்றி பெற்ற கட்சி | பாரிசான் நேசனல் | ||
சான்றுகள்: மலேசிய தேர்தல் ஆணையம்[6][7] |
வேட்பாளர் | கட்சி | செல்லுபடி வாக்குகள் |
பெற்ற வாக்குகள் |
% | ∆% | |
---|---|---|---|---|---|---|
ஜொகாரி அப்துல் கனி (Johari Abdul Ghani) |
பாரிசான் | 60,858 | 25,042 | 41.15% | +2.05% | |
காலிட் சமாட் (Khalid Samad) |
பாக்காத்தான் | - | 20,410 | 33.54% | -13.77% ▼ | |
ரொசுனி அடாம் (Rosni Adam) |
பெரிக்காத்தான் | - | 14,518 | 23.86% | +23.85% | |
கைருதீன் அபு அசான் (Khairuddin Abu Hassan) |
உள்நாட்டு போராளிகள் கட்சி (GTA / PEJUANG) |
- | 888 | 1.46% | +1.46 |