தித்வானா நகரம் | |
---|---|
ஆள்கூறுகள்: 27°24′N 74°34′E / 27.4°N 74.57°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | இராஜஸ்தான் |
மாவட்டம் | தித்வானா-குசாமான் மாவட்டம் |
அரசு | |
• வகை | நகராட்சி |
ஏற்றம் | 320 m (1,050 ft) |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் சுட்டு எண் | 341303 |
தொலைபேசி குறியீடு | 01580 |
வாகனப் பதிவு | RJ-37 |
இணையதளம் | https://didwana-kuchaman.rajasthan.gov.in/home/dptHome |
தித்வானா (Didwana), இந்தியாவின் இராஜஸ்தான் மாநிலத்தி நாகவுர் மாவட்டப் பகுதிகளைக் கொண்டு, 7 ஆகஸ்டு 2023 அன்று புதிதாக நிறுவப்பட்ட தித்வானா-குசாமான் மாவட்டத்தின்[1]நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இதன் தென்கிழக்கில் குசாமான் நகரம் 42.5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
இராஜஸ்தான் மாநிலத்தின் வடமேற்கில் மார்வார் பிரதேசத்தில் தித்வானா நகரம் அமைந்துள்ள்து.
இது ஜெய்ப்பூர் நகரத்திற்கு வடமேற்கே 159.4 கிலோ மீட்டர் தொலைவிலும்; அஜ்மீர் நகரத்திற்கு வடக்கில் 140 கிலோ மீட்டர் தொலைவிலும், ஜோத்பூர் நகரத்திற்கு வடகிழக்கில் 238 தொலைவிலும் உள்ளது.
2011ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின்படி, 31 வார்டுகளும், 8,451 குடியிருப்புகளும் கொண்ட இந்நகரத்தின் மக்கள் தொகை 53,749 ஆகும். அதில் ஆண்கள் 27808 மற்றும் பெண்கள் .25941 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 933 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.2% ஆகும். இதன் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும் முறையே 4,531 மற்றும் 91 ஆக உள்ளனர். இம்மாவட்ட மக்களில் இந்து சமயத்தினர் 59.37%, இசுலாமியர் 40.25%, கிறித்தவர்கள் மற்றும் பிறர் 0.12% ஆக உள்ளனர்.[2][3] இந்நகரத்தில் இந்தி மொழி, உருது, இராசத்தானி, மார்வாரி மொழிகள் பேசப்படுகிறது.