தினகர தேசாய் | |
---|---|
இயற்பெயர் | ದಿನಕರ ದೇಸಾಯಿ |
பிறப்பு | 10 செப்டம்பர் 1909 அன்கோலா (வடகன்னட மாவட்டம்), இந்தியா |
இறப்பு | 6 நவம்பர் 1982 மும்பை |
தொழில் | கவிஞர், எழுத்தாளர், கல்வியாளர், அரசியல்வாதி, சமூகச் செயற்பாட்டாளர். |
வகை | Poetryparty |
இலக்கிய இயக்கம் | சுடுகா |
தினகர தேசாய் (Dinakara Desai) ஒரு கவிஞரும், எழுத்தாளரும், கல்வியாளரும் அரசியல் ஆர்வலரும் ஆவார் . இவர் சுடுகா ( சுடுகா பிரம்மா என்றும் அழைக்கப்படும்) என்ற கவிதை வடிவத்திற்காக பிரபலமானார். [1] சுடுகா அல்லது சுடுகு என்பது நாற்கரக் கவிதை. இந்த வடிவம் பிற்காலத்தில் மற்ற கவிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. கர்நாடகாவின் உத்தர கன்னட மாவட்டத்தின் இலக்கிய வளர்ச்சிக்கு இவர் பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார்.
கொங்கண் பகுதியைச் சேர்ந்த தத்தாத்ரே தேசாய் (தந்தை) மற்றும் அம்பிகா (அம்மா) ஆகியோரின் மூன்றாவது குழந்தையாக 10 செப்டம்பர் 1909 அன்று அன்கோலாவில் ( உத்தர கன்னட மாவட்டம் ) பிறந்தார். இவருக்கு யஷ்வந்த் மற்றும் சங்கர் என்ற இரண்டு மூத்த சகோதரர்களும், சரஸ்வதி என்ற ஒரு தங்கையும் உள்ளனர். தினகரனுக்கு 9 வயதாக இருந்தபோது இவரது தாயார் இறந்துவிட்டார். [2]
1936 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி மகாபலேஷ்வர் வாக்லேவின் மகள் இந்திரா என்பவரை தினகரன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்தின் எளிமையின் அவசியத்தைப் பற்றி இவர் வீட்டுப் பெரியவர்களை நம்பவைத்தார். தார்வாட்டில் திருமணம் பதிவு செய்யப்பட்டு ரூ. 13 மட்டுமே திருமணச் செலவுக்காகச் செலவிடப்பட்டது. தினகரன் கடவுள் நம்பிக்கை இல்லாதவர், ஆனால், மனைவி வழிபடுவதை பொறுத்துக் கொண்டார். [2]
தினகரன் தேசாய்க்கு நாள்பட்ட நீரிழிவு நோய் இருந்தது. அதனால் உடல்நிலை மோசமாகி 1982 நவம்பர் 6 அன்று மும்பையில் இறந்தார்.