திபாங் வனவிலங்குச் சரணாலயம், இந்தியா Dibang Wildlife , India | |
---|---|
அருணாச்சலப் பிரதேசம் வரைபடம் | |
அமைவிடம் | அருணாசலப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 29°02′49″N 95°47′24″E / 29.047°N 95.79°E[1][2] |
பரப்பளவு | 4,149 km2 (1,602 sq mi) |
நிறுவப்பட்டது | 1992 |
நிருவாக அமைப்பு | அருணாசலப் பிரதேச சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை |
arunachalforests |
திபாங் வனவிலங்கு சரணாலயம் (Dibang Wildlife Sanctuary) என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் உள்ள எட்டு சரணாலயங்களில் ஒன்றாகும்.. மேல் திபாங் பள்ளத்தாக்கு மாவட்டத்தில் 4,149 கிலோமீட்டர் பரப்பளவில் இவ்வனவிலங்குச் சரணாலயம் அமைந்துள்ளது. பல்வேறு அரிய வனவிலங்குகள் வாழுமிடமாக இச்சரணாலயம் விளங்குகிறது.
மிசுமி மலையாடு, சிவப்பு மலைக்காட்டாடு, இரண்டு வகையான கத்தூரி மான்கள், சிவப்பு பாண்டா, ஆசிய கருப்புக் கரடி, எப்போதாவது தென்படும் புலி மற்றும் சில அரிய பறவையினங்கள்[3] இச்சரணாலத்தில் காணப்படுகின்றன. புதிய பறக்கும் அணில் வகை விலங்கினமும் இங்கு கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு மிசுமி குன்றின் இராட்சத அணில் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது[4].(பெட்டௌரிசுடா மிசுமியென்சிசு}.
அருணாச்சலப் பிரதேசத்தின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இவ்வரிய அணிலைப் பாதுகாக்கிறது.