திபிரிண்ட் (ThePrint) என்பது பிரிண்ட்லைன் மீடியா என்ற தனியார் நிறுவனத்துக்குச் சொந்தமான ஓர் இந்திய இணைய செய்தித்தாள் ஆகும்.[1] இந்நிறுவனம் பத்திரிகையாளர் சேகர் குப்தா அவர்களால் ஆகஸ்ட் 2017 -ல் துவங்கப்பட்டது.[2][3]
பத்திரிக்கையாளர் சேகர் குப்தா[4] அவர்களால் நிறுவப்பட்ட ப்ரிண்ட்லைன் மீடியா தனியார் நிறுவனம் செப்டம்பர் 16, 2016 அன்று புது தில்லியில் இணைக்கப்பட்டது.[5]
இந்த இணைய தளம் அரசியல் மற்றும் கொள்கைகளில் கவனம் செலுத்துவதன் மூலம் அறியப்படுகிறது. [6] இந்நிறுவனம் ஆஜ் தக் தொலைக்காட்சி நிறுவனத்துடன் கைகோர்த்து ஆஃப் தி கஃப் (Off the Cuff) என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறது. மேலும், இந்நிறுவனத்தின் யூடியூப் சானலும், முகநூல் சானலிலும் விளம்பரங்கள் செய்து வருகிறது.
தி ப்ரிண்ட் இணையதளம், முதன்மையாக புதிய ஊடக அறிக்கைகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுவருகிறது. இதன் பெரும்பாலான உள்ளடக்கங்கள் ஆங்கில் மொழியில் உள்ளது. இந்த தளம் கூடுதலாக இந்தி[10] மற்றும் தமிழ்[11] மொழி பதிப்பையும் கொண்டுள்ளது.
இந்நிறுவனம் தனக்கான நிதியை இணைய விளம்பரங்களின் வருவாயில் இருந்தே முக்கியமாக பெற்று வருகிறது. இருந்தாலும், நன்கொடைகள் மற்றும் சந்தாதாரர்களின் சந்தா மூலம் இயங்கி வருகிறது.
ஆஃப் தி கஃப் (Off The Cuff) என்பது ஆஜ் தக் தொலைக்காட்சி நிறுவனத்துடன் ஏற்பாடு செய்யப்பட்டு, பிப்ரவரி 2016-ம் ஆண்டு தொடங்கப்பட்ட வெளிப்படையாக பேசும் ஒரு நிகழ்ச்சிகளின் தொடர் ஆகும். இதில் பல்வேறு துறைகளில் இருந்து முக்கிய பிரபலங்களை வரவேற்று அவர்களுடன் உரையாடல்களை நிகழ்த்துகிறது. அந்நிகழ்வின் முக்கிய விருந்தினர்களில் அமீஷ் திரிபாதி, கீதா கோபிநாத், மார்டின் வால்ஃப், பிரான்சிஸ் ஃபுகுயாமா போன்றவர்கள் குறிப்பிட்டத்தக்கவர்கள்.