ஆங்கிலத்தில் குறிக்கோளுரை | யாரும் நோயால் பாதிக்கப்படக்கூடாது |
---|---|
வகை | மருத்துவக் கல்லூரி |
உருவாக்கம் | 25 நவம்பர் 2019 |
முதல்வர் | மருத்துவர் சுமித்ரா ஆக்கெர்[1] |
பட்ட மாணவர்கள் | 100 |
அமைவிடம் | , , 782460 , 25°49′42″N 93°25′29″E / 25.828347°N 93.424794°E |
வளாகம் | துணை நகரம் |
சேர்ப்பு | சிறீமந்தா சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம் இந்திய மருத்துவக் கழகம் |
இணையதளம் | dmcassam.in |
திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (Diphu Medical College and Hospital) இந்தியாவின் அசாம் மாநிலம் திபுவில் அமைந்துள்ள மருத்துவமனையுடன் கூடிய ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும். [2] [3] [4] 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. அசாம் மாநிலத்தின் 7 ஆவது மருத்துவக் கல்லூரியான இது அசாம் மாநில சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.. இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு, கவுகாத்தியில் உள்ள சிறீமந்தா சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..
2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆம் தேதியன்று இமந்த பிசுவா சர்மா அடிக்கல் நாட்டியதன் மூலம் கட்டுமானம் கல்லூரியின் தொடங்கப்பட்டது. [2] [5] 2017 ஆம் ஆண்டில், கல்லூரியின் தற்போதைய பணிக்கான நிதி 156.55 கோடி ரூபாயிலிருந்து 209 கோடி இந்திய ரூபாயாக உயர்த்தப்பட்டது. [3] [4] [6] [7] கட்டுமானம் 2012 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. ஆனால் கட்டிடக்கலை வடிவமைப்பு மூன்று முறை திருத்தப்பட்டதால், கல்லூரிக்கான இறுதித் திட்டம் 28 ஏப்ரல் 2018 அன்று பெறப்பட்டது. [8]
பிரம்மபுத்ரா உள்கட்டமைப்பு நிறுவனம் அசாம் இல்சு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. [9] 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று அசாம் இல்சு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பொது மக்களின் நலன் கருதி திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை எனப் பெயர் மாற்றப்பட்டது..
சிறுவர்கள், பெண்கள் மற்றும் செவிலியப் பணியாளர்களுக்கு தலா 204 இருக்கைகள் (102 அறைகள்), [10] ஒரு நவீன நூலகம் மற்றும் குளிரூட்டப்பட்ட விரிவுரை மண்டபம் போன்ற வசதிகள் இக்கல்லூரியில் உள்ளன. தற்போது கல்லூரியானது ஒரு கல்வியாண்டுக்கு 100 இளங்கலை மாணவர்களைக் கொண்டு செயல்படுகிறது. [2] [11]
மருத்துவமனையில் தற்போது 300 படுக்கைகள் உள்ளன. அவசர ஊர்தி உட்பட 24x7 மணிநேர அவசர சேவைகள். கோவிட்-19 பரிசோதனை மற்றும் நோயறிதல் வசதி, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், இரத்த வங்கி, எக்சு கதிர் மற்றும் மீயொலி , கதிரியக்கவியல்,மருத்துவ ஆய்வகம், மருந்தகம் போன்றவற்றுடன் நவீன சமையலறையும் இடம்பெற்றுள்ளது.[12]
மருத்துவமனையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெளிநோயாளர் பிரிவு செயல்படுகிறது. [12] நோயாளிகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை (மாலை). [13] வரை பார்வையிடப்படுகிறார்கள்.