திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம்

திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம்
Thippagondanahalli Dam
திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் மதகுகள்
நாடுஇந்தியா
அமைவிடம்35 கிலோமீட்டர்கள் (22 mi) பெங்களூர்
புவியியல் ஆள்கூற்று12°58′24″N 77°20′33″E / 12.97333°N 77.34250°E / 12.97333; 77.34250

திப்பகொண்டனஹள்ளி நீர்த்தேக்கம் (Thippagondanahalli Reservoir) டி. ஜி. ஹள்ளி அணை அல்லது சாமராஜசாகர் என்றும் அழைக்கப்படும் அணையானது இந்தியாவில் கருநாடக பெங்களூருக்கு மேற்கு 35 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இது பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தால் மேற்கு பெங்களூருக்கான முக்கிய குடிநீர் ஆதாரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[1] இந்த ஏரி மனிதனால் உருவாக்கப்பட்ட செயற்கை நீர்த்தேக்கமாகும். இது 1933 -ல் திறக்கப்பட்ட அணையைக் கட்டியதன் மூலம் உருவாக்கப்பட்டது. கட்டுமானப் பணிகளை மோ. விசுவேசுவரய்யா மேற்பார்வையிட்டார்.

தண்ணீர் பஞ்சம்

[தொகு]

2007 கோடையில், நீர்த்தேக்கப் பகுதியில் மழை இல்லாததால், நகரத்திற்குப் பயன்படுத்தப்படும் தண்ணீர் இல்லாமல் ஏரி கிட்டத்தட்ட வறண்டு போனது.[1][2]

பொழுதுபோக்கு பயன்பாடு

[தொகு]

குறிப்பாகக் கோடைக் காலங்களில் திப்பகொண்டனஹல்லி பிரபலமான பொழுதுபோக்கு இடமாகும். இது மாகடிச் சாலையில் அமைந்துள்ளது. அர்காவதி கீழ்புறத்தில் மஞ்சனபெலேவில் மேலும் ஒரு அணை உள்ளது.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]