திமிலை

திமிலை

திமிலை என்பது தமிழர் இசைக்கருவிகளுள் ஒன்றாகும். இது மரத்தினால் செய்யப்பட்டு தோலினால் கட்டப்பட்ட தோற்கருவியாகும். இது பாணி எனவும் அழைக்கப்படுகிறது. மணற்கடிகார வடிவில் இருக்கும் திமிலை இசைக்கருவியானது கேரளா மற்றும் தென்னிந்தியக் கோவில்களில் இசைக்கப்படுகிறது. நன்கு செப்பம் செய்யப்பட்ட பலா மரத்தில் செய்யப்பட்டு கன்றின் தோலால் (குறிப்பாக 1-2 ஆண்டேயான கன்றின் தோல்) மூடப்பட்ட இருமுக முழவுக்கருவிகளுள் ஒன்று. இக்கருவி பஞ்சவாத்தியம் எனப்படும் கருவிகளுள் ஒன்றாக கேரளா மாநிலக் கோவில்களில் இசைக்கப்படுகிறது.[1]

வரலாறு

[தொகு]

திமிலை தமிழரின் பழமையான இசைக் கருவி ஆகும். பழந்தமிழகத்தில் பரவலாக பயன்பாட்டில் இது இருந்துள்ளது. சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையில் தாழ்குரல் தண்ணுமை என்பதற்கு பொருள் கூறும்போது திமிலை உள்ளிட்ட 31 இசைக் கருவிகளைன் பெயர்களை அடியார்க்கு நல்லார் குறிப்பிடுகிறார். பெரிய புராணத்தில் திமிலை பற்றிக் குறிப்பிடப்படுகிறது.

அருணகிரிநாதர் தன் திருப்புகழில் பல இடங்களில் திமிலை குறித்து குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டு கோயல் சிற்பங்களில் திமிலை வாசிக்கும் சிற்பங்கள் பல உள்ளன.[3]

மேற்கோள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2012-05-11. பார்க்கப்பட்ட நாள் 2012-11-15.
  2. பன்னிரண்டாம் திருமுறை, எறிபத்த நாயனார் புராணம்: பாடல் எண் : 31
  3. "செண்டையும் திமிலையும் தமிழ்க் கருவிகளே!". Hindu Tamil Thisai. 2023-05-14. பார்க்கப்பட்ட நாள் 2023-05-18.