தியாகராசர் விளையாட்டு வளாகம் | |
---|---|
இடம் | புது தில்லி |
அமைவு | 28°34′37″N 77°13′0″E / 28.57694°N 77.21667°E |
திறவு | 2 ஏப்ரல் 2010 |
உரிமையாளர் | |
குத்தகை அணி(கள்) | |
அமரக்கூடிய பேர் | 4494 |
தியாகராசர் விளையாட்டு வளாகம் புதுதில்லியில் உள்ள ஓர் விளையாட்டரங்கமாகும். இந்தியாவில் அமைந்துள்ள உலகத்தரம் வாய்ந்த பசுமை விளையாட்டரங்கத்திற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
16.5 ஏக்கர் பரப்பளவில் பசுமை கட்டிட நுட்பங்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ள[1] தியாகராசர் விளையாட்டு வளாகம் 4,494 இருக்கைகளைக் கொண்டது. சிறந்த நீர் மேலாண்மைக்காக மழைநீர் சேகரிப்புத் திட்டம்,கழிவுநீர் மறுசுழற்சி,இரு நீரிறைப்பு அமைப்புகள், உணரிகள் கொண்டியங்கும் குழாய்கள் போன்ற நுட்பங்களைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. மண்வெளி வடிவமைப்பும் உள்ளூர் செடிகளைப் பயன்படுத்தி மண் சீரழிவை குறைக்கும் விதமாக அமைக்கப்பட்டுள்ளது.
இதேபோல மின்னாற்றல் சேமிப்பிலும் இதன் வடிவமைப்பு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.சூரிய ஆற்றல் கொண்டு ஒளியூட்டப்பட்டுள்ளது.தவிர கட்டிடத்துடன் ஒருங்கிணைந்த ஒளிமின் கொள்கை எடுத்தாளப்பட்டுள்ளது.எனவே தியாகராசர் விளையாட்டரங்கம் மின்சக்தியை பெறுவதற்கு மாறாக உபரி மின்சாரமத்தை மின் வாரியத்திற்கு வழங்கும்.
இதன் மொத்த கட்டுமானச் செலவு ரூ.300 கோடிகளாகும்.[1] பரணிடப்பட்டது 2010-05-27 at the வந்தவழி இயந்திரம்
2010 பொதுநலவாயம் விளையாட்டுக்கள் நடந்த போது தியாகராசர் அரங்கம் நெட்பால் விளையாட்டிற்கான மையமாகத் திகழ்ந்தது.