தியான புத்தர் சிலை

தியான புத்தர் சிலை, அமராவதி[1]
தியான நிலையில் அமர்ந்திருக்கும் புத்தர்
அமைவிடம்அமராவதி சிற்றூர், குண்டூர் மாவட்டம், இந்தியா
ஆள்கூற்றுகள்16°34′44″N 80°21′11″E / 16.5789°N 80.3531°E / 16.5789; 80.3531
உயரம்125 அடிகள் (38 m)
நிர்வகிக்கும் அமைப்புஆந்திரப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகம்
தியான புத்தர் சிலை is located in ஆந்திரப் பிரதேசம்
தியான புத்தர் சிலை
Location in Andhra Pradesh, India

தியான புத்தர் சிலை (Dhyana Buddha statue) இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் அமராவதியில் அமைந்துள்ளது. தியான புத்தர் சிலையானது சுமார் 125 அடி (38 மீட்டர்) உயரத்தில் அமைக்கப்பட்டுள்ளது.[2] இச்சிலை கிருஷ்ணா நதி ஆற்றங்கரையில் சுமார் 4.5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இச்சிலையின் அருகில் புத்த மத சிறப்புகளை வெளிப்படுத்தும் பல சிற்பங்கள் உள்ளன.

வரலாறு

[தொகு]
தியான புத்தர் சிலையில் மாசைத்யா கலை

அமராவதி மற்றும் அதனருகில் உள்ள தரணிக்கோட்டை ஆகியவற்றின் வரலாறானது கி. மு 5 ஆம் நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது. இந்த இடம்நூ கி.மு. 3 ஆம் நூற்றாண்டிலிருந்து கி. பி. 3 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த சாதவாகனர்களின் தலைநகரமாக இருந்துள்ளது. சாதவாகனர்கள் இந்து மதத்துடன் புத்த மதத்தையும் போற்றிப் பாதுகாத்து வந்துள்ளனர். அமராவதி நகரிலுள்ள மிக முக்கியமான வரலாற்று நினைவிடமாக அமராவதி பௌத்த தொல்லியல் களம் அமைந்துள்ளது. இந்த இடம் இந்திய தொல்லியல் ஆய்வி நிறுவனத்தால் பழைய அருங்காட்சியகத்தினரால் பாதுகாக்கப்பட்டு வந்தது.

ஆந்திரப் பிரதேசத்தின் குண்டூர் மாவட்டத்தில் சமூக நலத் துறையின் துணை இயக்குநராகப் பணியாற்றிய ஆர். மல்லிகார்ஜுன ராவ் 2002 ஆம் ஆண்டு இத்திட்டத்தை உருவாக்கினார். மல்லிகார்ஜுன ராவ், கிமு 200 - கிபி 200 இல் இப்பகுதியில் செழித்து வளர்ந்த அமராவதி கலைப் பள்ளியின் மகத்துவத்தால் ஈர்க்கப்பட்டு, அதை மீண்டும் உருவாக்க விரும்பினார். குண்டூர் மாவட்ட நிர்வாகம் 4.5 ஏக்கர் நிலத்தை வழங்கியது மற்றும் கட்டுமானப் பணிகள் 2003-04 இல் தொடங்கியது. இத்திட்டத்திற்கான நிதிச்செலவினம் ஆந்திரப்பிரதேச மாநில அரசாங்கத்தின் குண்டூர் மாவட்ட நிர்வாகம், தலாய் லாமா, சுற்றுலாத்துறை, காலச்சக்ரா நோர்புலிங்கா அமைப்பு ஆகியவற்றாலும் மல்லிகார்ஜுன ராவால் தொடங்கப்பட்ட ஓவியங்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனையில் கிடைக்கும் நிதியாலும் மேற்கொள்ளப்பட்டது. சுற்றுலாத்துறை இத்திட்டத்தை 2007 ஆம் ஆண்டு கைக்கொண்டது. கட்டுமானப் பணிகள் 2015 ஆம் ஆண்டு முடிவடைந்தது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Dhayana Buddha Project in Amaravathi".
  2. "Amaravathi buddha project".