திரங்கா புள்ளி (Tiranga Point), சந்திரனின் தென் துருவம் அருகே சந்திரயான்-2ன் விக்கிரம் எனும் தரையிறங்குகலம் வெடித்துச் சிதறிய இடத்திற்கு வைக்கப்பட்ட பெயர் ஆகும். 26 ஆகஸ்டு 2023 அன்று பெங்களூரில் உள்ள இசுரோ தொலையளவியல், கண்காணிப்பு, கட்டளை வலைப்பிணையம் இவ்விடத்திற்கு திரங்கா புள்ளி எனப்பெயரிட்டது.[1] இவ்விடம் சந்திரனின் 70°52′52″S 22°47′02″E / 70.8810°S 22.7840°E[2] என்ற ஆயத்தொகுதிகளில், இரண்டு பள்ளங்களுக்கு இடையே இப்புள்ளி அமைந்துள்ளது.[3]
இந்தியில் தீன் மற்றும் ரங்க எனில் மூன்று நிறங்கள் என்று பொருள். இந்திய தேசியக் கொடியில் உள்ள மூன்று நிறங்களைக் குறிக்கிறது.[4]