திராங்கானு ஆறு Terengganu River | |
---|---|
அமைவு | |
சிறப்புக்கூறுகள் | |
மூலம் | |
⁃ அமைவு | கென்யிர் ஏரி |
முகத்துவாரம் | |
⁃ அமைவு | தென் சீனக்கடல் |
⁃ ஆள்கூறுகள் | 5°19′45″N 103°8′10″E / 5.32917°N 103.13611°E |
வடிநில சிறப்புக்கூறுகள் | |
துணை ஆறுகள் | |
⁃ இடது | நெருஸ் ஆறு; பெராங் ஆறு; |
⁃ வலது | தெர்சாட் ஆறு; தெலிமோங் ஆறு |
திராங்கானு ஆறு என்பது (மலாய்: Sungai Terengganu; ஆங்கிலம்: Terengganu River) மலேசியாவின் கிழக்குக் கரை மாநிலமான திராங்கானு மாநிலத்தில் உள்ள ஆறு. இந்த ஆறு உலு திராங்கானு மாவட்டத்தில் உள்ள கென்யிர் ஏரியில் (Lake Kenyir) உருவாகிறது.
திராங்கானு மாநிலத்தின் தலைநகரான கோலா திராங்கானு வழியாக பாய்ந்து தென் சீனக் கடலில் கலக்கிறது. இதன் பாதையில் சுல்தான் மகமூட் பாலம் (Sultan Mahmud Bridge); மனிர் பாலம் (Manir Bridge); புலாவ் செகாட்டி பாலம் (Pulau Sekati Bridge); கோலா திராங்கானு பாலம் (Kuala Terengganu Drawbridge) என நான்கு பாலங்கள் உள்ளன..[1]
திராங்கானு ஆற்றின் முக்கிய துணை நதிகள்: நெருஸ் ஆறு; பெராங் ஆறு; தெர்சாட் ஆறு; தெலிமோங் ஆறு ஆகிய நான்கு ஆறுகள். திராங்கானு ஆற்றுப் படுகையில் மொத்த நீர்ப்பிடிப்பு பகுதி 5000 சதுர கி.மீ. ஆகும்.
இந்த ஆற்றில் சில தீவுகளும் உருவாகி உள்ளன. கரையோரத்திற்கு அருகில் இந்த ஆறு மெதுவாக வளைந்து செல்வதால் சிறு தீவுகள் உருவாகி உள்ளன. டூயோங் தீவு (Pulau Duyong); டூயோங் கெச்சில் தீவு (Pulau Duyong Kecil); வான் மேன் தீவு (Pulau Wan Man) ஆகிய தீவுகள் உருவாகி உள்ளன.[2]
திராங்கானு ஆற்றின் துணை ஆறுகள் செல்லும் வழிகளில் ரப்பர் தோட்டங்கள், தென்னைத் தோட்டங்கள், எண்ணெய்ப் பனைத் தோட்டங்கள்; மீன்வளர்ப்புப் பண்ணைகள், வணிகத் தொழில்கள், நகர்ப்புற கிராமப்புறக் குடியிருப்புகள் போன்ற பல்வேறு சமூகப் பொருளாதார நடவடிக்கைகள் மிகுதியாக உள்ளன.
கோலா திராங்கானு மற்றும் கோலா பெராங் (Kuala Berang) நகரங்களில் மக்கள் தொகையின் அடர்த்தி அதிகமாக உள்ளது. ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் முதல் மார்ச் வரை வடகிழக்குப் பருவமழைக் காலம். அந்தக் காலத்தில் திராங்கானு ஆற்றுப் படுகையில் கனமழை பொழிவது வழக்கமாக உள்ளது.[3]
வார்ப்புரு:திராங்கானு புவியியல்