திராங்கானு சுல்தானா நூர் சகிரா Sultanah Nur Zahirah | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
![]() | |||||||||
![]() 2023-இல் சுல்தானா நூர் சகிரா | |||||||||
13-ஆவது மலேசிய அரசி | |||||||||
ஆட்சிக்காலம் | 13 டிசம்பர் 2006 - 12 டிசம்பர் 2011 | ||||||||
மலேசியா | 26 ஏப்ரல் 2007 | ||||||||
முன்னையவர் | பெர்லிஸ் துவாங்கு பவுசியா | ||||||||
பின்னையவர் | கெடா சுல்தானா அஜா அமீனா | ||||||||
திராங்கானு அரசி | |||||||||
ஆட்சிக்காலம் | 12 சூலை 1998 – தொடக்கம் | ||||||||
முடிசூட்டுதல் | 4 மார்ச் 1999 | ||||||||
முன்னையவர் | தெங்கு அம்புவான் பரியா | ||||||||
பிறப்பு | 7 திசம்பர் 1973 அலோர் ஸ்டார், கெடா, மலேசியா | ||||||||
துணைவர் | சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் (தி. 1996) | ||||||||
குழந்தைகளின் பெயர்கள் |
| ||||||||
| |||||||||
மரபு | பெண்டகாரா | ||||||||
தந்தை | அடில் பெக்கரி | ||||||||
தாய் | நூர் ரகிமா பிந்தி அஜி முகமது சைன் | ||||||||
மதம் | இசுலாம் |
திராங்கானு சுல்தானா நூர் சகிரா அல்லது திராங்கானு அரசியார்; (ஆங்கிலம்: Sultanah Nur Zahirah அல்லது Rozita binti Adil Bakeri; மலாய்: Sultanah Nur Zahirah) (7 டிசம்பர் 1973); என்பவர் 2006 முதல் 2011 சனவரி வரை மலேசியாவின் 13-ஆவது மலேசியப் பேரரசியார் ஆவார்.
தற்போதைய திராங்கானு மாநிலத்தின் அரசி; திராங்கானு சுல்தான் மிசான் சைனல் ஆபிதீன் அவர்களின் துணைவியாரும் ஆவார். தற்போது மலேசிய திரங்கானு பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பொறுப்பு வகிக்கிறார்.
1973-ஆம் ஆண்டு டிசம்பர் 7-ஆம் தேதி மலேசியா, கெடா, அலோர் ஸ்டார் மாநகரில் பிறந்தார். அவரின் பிறப்புப் பெயர் ரோசிதா பிந்தி அடில் பெக்கரி.
அவர் தன் தொடக்கப் பள்ளிக் கல்வியை கெடா, அலோர் ஸ்டார் செயின்ட் நிக்கலஸ் கான்வென்ட் பள்ளியில் பெற்றார். மேல்நிலைப் பள்ளிக் கல்வியையும் அதே பள்ளியில் பெற்றார். அங்கு அவர் பள்ளி நூலகராகவும்; பெண் வழிகாட்டி உறுப்பினராகவும் இருந்தார். பள்ளிக் காலத்தில் அவர் மனித வளத் துறையில் ஆர்வம் காட்டினார்.[1]
28 மார்ச் 1996-இல் கோலா திராங்கானுவில், திராங்கானுவின் அப்போதைய இளவரசர் தெங்கு மிசான் சைனால் ஆபிதீன் அவர்களை மணந்தார். 19 சூலை 1998-இல் திராங்கானு சுல்தானாக தெங்கு மிசான் சைனால் ஆபிதீன் அறிவிக்கப்பட்ட பிறகு, திராங்கானுவின் பரமேசுவரி நூர் சகிரா என்ற பட்டம் அவருக்கு வழங்கப்பட்டது.
பின்னர், 5 ஜூன் 2006-இல், திராங்கானுவின் பரமேசுவரி நூர் சகிரா என்ற பழைய பெயர் திராங்கானு சுல்தானா நூர் சகிரா (Sultanah Nur Zahirah) என மாற்றப்பட்டது.
இதுவரையிலும், மலேசியப் பேரரசியார் பதவி வகித்த 15 பேரரசியார்களில், மூவர் மட்டுமே சாமானிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அவர்களில் சுல்தானா நூர் சகிரா அவர்களும் ஒருவராவார். பேராக் சுல்தானா துவாங்கு பைனுன் முகமட் அலி; மற்றும் சிலாங்கூர் சுல்தானா துவாங்கு பரமேசுவரி சித்தி ஆயிசா ஆகியோருக்குப் பிறகு, சுல்தானா நூர் சகிரா மலேசியப் பேரரசியார் பதவி வகித்த மூன்றாவது சாமானியர் ஆவார்.
சுல்தானா நூர் சகிரா, மனையக ஒப்பனை அலங்காரத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்; மற்றும் அரண்மனையின் உட்புற வடிவமைப்பில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். சமையல் துறையில் அதிகமாய் ஆர்வம் கொண்ட இவர்; தன் கணவர் மற்றும் குடும்பத்தினருக்கு பிடித்த உணவு வகைகளை அவராகவே சமைத்துத் தருகிறார்.
காற்றுப்பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் தன் ஓய்வு நேரத்தை செலவிடுகிறார். குதிரைச் சவாரி போன்ற கடினமான விளையாட்டுகளையும் விரும்புகிறார். தன் கணவர் உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ குதிரைச் சவாரி பந்தயங்களில் பங்கேற்கும் போது அவருக்கு ஆதரவு அளிப்பதில் முதலிடம் வழங்குகிறார்.
சில இடங்களுக்கு சுல்தானா நூர் சகிரா பெயர் வைக்கப்பட்டு உள்ளது, அவற்றுள்: