திரிதிப் சௌதுரி Tridib Chaudhuri | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் (மாநிலங்களவை) மேற்கு வங்காள மாநிலங்களவை | |
பதவியில் 1987–1993 | |
பதவியில் 1993 – 1997 (2 முறை) | |
நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய நாடாளுமன்றம் பர்காம்பூர் மக்களவைத் தொகுதி | |
பதவியில் 1952-1984 | |
முன்னையவர் | புதிய தொகுதி |
பின்னவர் | அத்திசு சந்தர சின்கா |
தொகுதி | பர்காம்பூர் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | பகரம்பூர், வங்காள மாகாணம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும் | 12 திசம்பர் 1911
இறப்பு | 1 மே 1997 கொல்கத்தா, மேற்கு வங்காளம், இந்தியா | (அகவை 85)
அரசியல் கட்சி | புரட்சிகர சோசலிசக் கட்சி |
வாழிடம் | கொல்கத்தா |
As of 17 செப்டம்பர், 2006 மூலம்: [1] |
திரிதிப் சௌதுரி (Tridib Chaudhuri) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1911 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் 12 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இந்திய சுதந்திர ஆர்வலராகவும் இவர் அறியப்படுகிறார். புரட்சிகர சோசலிச கட்சியின் தலைவர் மற்றும் நிறுவனராக செயல்பட்டார். மேற்கு வங்காளத்தில் பகரம்பூர் மக்களவை தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். 1974 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் கூட்டு எதிர்க்கட்சி வேட்பாளராக இருந்தார். இந்தியாவில் குடியரசுத் தலைவர் தேர்தலில் பங்கேற்ற முதல் வங்காளி என்ற சிறப்பை பெற்றார். 1952 ஆம் ஆண்டு முதல் 1984 ஆம் ஆண்டு வரை மக்களவை உறுப்பினராகவும், 1987 ஆம் ஆண்டு முதல் 1997 ஆம் ஆண்டு இறக்கும் வரை மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்தார். கோவா விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். [1] புரட்சிகர சோசலிச கட்சியின் நிறுவனர்களில் ஒருவர் என்ற சிறப்புக்கும் உரியவராக இருந்தார். [2]
1933 ஆம் ஆண்டில் தனது இளங்கலை பட்டத் தேர்வில் தேர்ச்சி பெற்றார், பின்னர் இவர் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக தேசத்துரோகத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டபோது, சிறையில் இருந்து புற மாணவராக கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலை பட்டம் பெற்றார். [3]
திரிதிப் சௌதுரி ஏழு முறை மக்களவைகளில் இருந்தார்.
17 ஆகஸ்ட் 1974 ஆம் ஆண்டு ஆகத்து மாதம் 17 ஆம் தேதியன்று இந்திய தேர்தல் ஆணையம் இந்தியாவின் மறைமுக 6 ஆவது குடியரசுத் தலைவர் தேர்தலை நடத்தியது. திரிதிப் சவுத்ரி 1,89,196 வாக்குகள் வித்தியாசத்தில் பக்ருதீன் அலி அகமதுவிடம் தோல்வியடைந்தார்.
• தி சுவிங் பேக்: A Critical Survey of the devious Zig-zags of CPI, Political Line (1947–50).