திரிதேவ் ராய் ত্রিদিব রায় | |
---|---|
பிறப்பு | 14 மே 1933 ராஜ்பாரி மாவட்டம் |
இறப்பு | 17 செப்டெம்பர் 2012 (அகவை 79) இஸ்லாமாபாத் |
பணி | எழுத்தாளர் |
ராஜா திரிதேவ் ராய் ( Raja Tridiv Roy உருது: راجہ تری دیو رائے ; வங்காள மொழி: ত্রিদিব_রায় (14 மே 1933 - 17 செப்டம்பர் 2012) [1] பரவலாக திரிதேவ் ராய் என அறியப்படும் இவர் பாகிஸ்தான் அரசியல்வாதி, இராஜதந்திரி மற்றும் எழுத்தாளர் ஆவார், அவர் சுல்பிகர் அலி பூட்டோ அமைச்சரவையில் சிறுபான்மை விவகாரத் துறையின் அமைச்சராக இருந்தார். இன்றைய பங்களாதேஷின் சிட்டகாங் மலைப்பிரதேசத்தில் சக்மா பழங்குடியினரின் 50 வது மன்னராகவும் இருந்தார்.1953 மே 2 முதல் பங்களாதேஷ் விடுதலைப் போரைத் தொடர்ந்து 1971 ல் பதவி விலகும் வரை இவர் மன்னர் பதவியில் இருந்தார்.[2] 1971 இல் பங்களாதேஷ் சுதந்திரம் அடைந்தபோது அவர் பாகிஸ்தானியராக இருக்க விரும்பி பாகிஸ்தான் சென்றார். அவர் ஒரு எழுத்தாளர், இராஜதந்திரி, புத்த மதத் தலைவர் மற்றும் அரசியல்வாதி என அறியப்பட்டார்.[3]
ராய் 1933 இல் பிரித்தானிய இந்தியாவின் சிட்டகாங் மலைப்பகுதிகளில் உள்ள ரங்கமதி, ராஜ்பரியில் பிறந்தார்.[4] அவர் ராஜா நளி ராயின் மகன் ஆவார்.[5]
அவர் மே 2, 1953 இல் சக்மா வட்டத்தின் 50 வது ராஜா அல்லது பரம்பரை மன்னராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4][5] 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் விடுதலைப் போரின்போது சக்மா மக்களின் தற்போதைய ஆட்சியாளரான தனது மகன் ராஜா தேவாசிஷ் ராய்க்கு ஆதரவாக அவரின் தந்தை ராய் அரியணையைத் துறந்தார்.
பெரிதும் முஸ்லீம் அல்லாதவர்களாக இவர்கள் இருந்தபோதிலும், 1947 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரிவினையின் போது சிட்டகாங் மலைப்பகுதிகள் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் (குறிப்பாக கிழக்கு பாகிஸ்தான் ) ஆங்கிலேயர்களால் பாகிஸ்தானுக்கு வழங்கப்பட்டன.[4] சக்மாக்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பிற மக்கள் பாகிஸ்தானுக்கு பதிலாக இந்தியாவுடன் ஐக்கியமாவதில் விருப்பமாக இருந்தனர். ஆரம்பத்தில் இந்தப் பகுதிக்கு சிறப்பு சுயாட்சி அதிகாரம் வழங்கப்பட்டது. ஆனால் 1950 ஆம் ஆண்டுகளில் பாகிஸ்தான் அரசாங்கத்தால் இப்பகுதியின் நிலை மாற்றப்பட்டது, பெருமளவில் பழங்குடியினர் அல்லாத, முஸ்லீம் வங்காள குடியேற்றவாசிகளை இப்பகுதியில் குடியேறலாம் எனும் அனுமதியினை அவர்களுக்கு வழங்கியது பாக்கிஸ்தானிய அரசாங்கம் 1960 களின் முற்பகுதியில் ஒரு நீர் மின்சார அணையான கப்டாய் அணையைத் திறந்தது. இதனால் சக்மாக்களின் விளைநிலங்களில் சுமார் 40% வெள்ளத்தில் மூழ்கியது. இருப்பினும், திரிதேவ் ராயின் கீழ் உள்ள சக்மாக்கள் 1960 கள் மற்றும் 1970 களில் பாகிஸ்தான் இராணுவத்துக்கும் பங்களாதேஷ் சுதந்திரத்திற்காக வும் போராடிய முக்தி பஹினிக்கும் ஆகயோர் இருவருக்கும் இடையில் நடுநிலைத் தன்மையுடன் இருந்தனர்.
1970 ஆம் ஆண்டில், அவாமி லீக்கின் தலைவரும், பங்களாதேஷின் வருங்கால நிறுவனருமான சேக் முஜிபுர் ரகுமான், அவாமி லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினராக போட்டியிடுமாறு ராயைக் கேட்டார்.[4] ஆனால் ரகுமானின் கோரிக்கையினை இவர் நிராகரித்தார். அதற்குப் பதிலாக தான் தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என விரும்பினார். சிட்டகாங் மலைப்பகுதிகளில் தனது தொகுதியிலிருந்து சுயாதீன வேட்பாளராக ராய் வெற்றி பெற்றார்.
திரிதிவ் ராய் 17 செப்டம்பர் 2012 அன்று இஸ்லாமாபாத்தில் உள்ள தனது வீட்டில் 79 ஆம் வயதில் இறந்தார்.[6] இவருக்கு ஆரத்தி ராய் எனும் மனைவியும் மூன்று மகன்கள், இரண்டு மகள்கள் உள்ளனர்.[5]