திரிபுரி தேசியம் (Tripuri nationalism) என்பது திரிபுரி மக்களின் தன்னாட்சி உரிமையை ஆதரிக்கும் ஒரு கருத்தியல் ஆகும்.[1] இந்தப் பகுதியின் பூர்வ பழங்குடி மக்கள் திபத்திய பர்மிய பழங்குடி மக்களாவர். இப்பகுதியில் உள்ள பழங்குடி மக்களே திரிபுரா சுதேச சமஸ்தான பகுதியின் பெரும்பான்மை மக்களாக இருந்தனர். ஆனால் இது 1949 இல் திரிபுரா மாநிலமாக இந்தியாவில் இணைந்தத பிறகு மாறியது, இதன் பின்னர், இந்த மாநிலத்தில் வங்காளிகளின் பெருமளவிலான குடியேற்றத்தின் காரணமாக, பூர்வீக திரிபுரி மக்கள் எண்ணிக்கை 30% ஆக குறைந்து தங்கள் தாயகத்தில் சிறுபான்மையினராக குறைந்து போயினர்.
இந்த பிரச்சினை பல ஆயுதம் ஏந்திய எழுச்சிகள் மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு வழிவகுத்துள்ளது. 1950 இல் இந்தியக் குடியரசில் திரிபுரா இராச்சியம் இணைவதை தடுக்க முயன்று ஒரு கலகம் ஏற்பட்டது,[2] மேலும் 1980கள் முதல் 2000 ஆம் ஆண்டுகளில் ஆயுத மோதல்கள் தொடர்ந்து வெடித்தன. 1989 ஆம் ஆண்டு முதல், திரிபுரா தேசிய விடுதலை முன்னணி (என்எல்எஃப்டி) மற்றும் திரிபுரா புலிப்படை (ATTF) ஆகியவற்றின் தலைமையில் ஆயுதக் கிளர்ச்சிகள் நடத்தப்பட்டன.[3][4] வங்காளிகள் தங்களுக்கு சொந்தமாக ஐக்கிய வங்காளி விடுதலை புலிகள் முன்னணி (UBLTF) போன்ற படைகளை அமைத்து அதன் மூலம் பதிலடி கொடுத்தனர், இதன் மூலம் 2000 பழங்குடி கிராமங்களை அழிக்கப்பட்டன.
உலகில் பத்து தீவிரமான தீவிரவாத குழுக்களில் ஒன்றாக பயங்கரவாதத்தை தடுக்கும் தேசிய நினைவு நிறுவகம் திரிபுரா தேசிய விடுதலை முன்னணியை வகைப்படுத்தியுள்ளது, மேலும் தங்கள் மக்களை கட்டாயப்படுத்தி கிறித்துவத்துக்கு மாற்றுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.[5]
போராளிகளின் நடவடிக்கை உச்சம்பெற்ற 2000 ஆண்டில் பயங்கரவாதத்தால் 514 இறப்புகள் நிகழந்தன. 2012 ஆம் ஆண்டுக்குள், கிளர்ச்சிகளை அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளாலும், சரணடைந்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் அதிகாரிகளால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டன.[6]
திரிபுரி அரசியல் அமைப்புகள் மற்றும் போராளிக் குழுக்கள் பின்வருமாறு: