திரிபுவனாதித்யன் | |
---|---|
கெமர் பேரரசின் அரசன் | |
ஆட்சிக்காலம் | 1167–1177 |
முன்னையவர் | இரண்டாம் யசோவர்மன் |
பின்னையவர் | ஏழாம் செயவர்மன் |
இறப்பு | 1177 |
இராணுவ சேவை | |
பற்றிணைப்பு | கெமர் பேரரசு |
போர்கள்/யுத்தங்கள் |
|
திரிபுவனாதித்யன் (Tribhuvanāditya) 1166 முதல் 1177 வரை கெமர் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். 1165 ஆம் ஆண்டில் இரண்டாம் யசோவர்மனைக் கொன்ற பிறகு கம்போடியாவின் அரியணைக்கு வந்தார். இவர் ஒரு ஏகாதிபத்திய தேர்வு முறை மூலம் நியமிக்கப்பட்டவராவார். யசோவர்மனின் விசுவாசமான ஆதரவாளர்களால் ஏற்பட்ட பல கிளர்ச்சிகளை அடக்கினார். ஆனால் மூன்றாம் செய இந்திரவர்மனின் கீழ் அண்டை நாடான சம்பா பேரரசின் படைகள் இவரது தலைநகரான அங்கோர் மீது படையெடுத்து கைப்பற்றும் வரை அரியணையையில் இருக்க முடிந்தது. பின்னர் மூன்றாம் செய இந்திரவர்மனும் கொல்லப்பட்டார்.[1] [2]:163
1177 இல் நான்காம் செய இந்திரவர்மன் தலைமையிலான சாம் படையெடுப்பு, கெமர் தலைநகரைக் கொள்ளையடித்தது.[3]:78–79 [2]:164[4]:120