![]() | இக்கட்டுரையோ இக்கட்டுரையின் பகுதியோ துப்புரவு செய்ய வேண்டியுள்ளது. இதை விக்கிப்பீடியாவின் நடைக்கேற்ப மாற்ற வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, இந்தக் கட்டுரையை துப்புரவு செய்து உதவலாம். |
திரியம்பகேசுவர் தொடர் Trimbakeshwar Range, Maharashtra | |
---|---|
![]() பிரம்மகிரி சிகரம் | |
உயர்ந்த புள்ளி | |
உயரம் | 4,248 அடி (1,295 m) |
ஆள்கூறு | 19°55′N 73°30′E / 19.917°N 73.500°E |
பெயரிடுதல் | |
தாயகப் பெயர் | त्र्यंबकेश्वर पर्वत (Marathi) |
புவியியல் | |
மகாராட்டிராவில் அமைவிடம் | |
அமைவிடம் | மகாராட்டிரம், இந்தியா |
மூலத் தொடர் | மேற்குத் தொடர்ச்சி மலை |
திரியம்பகேசுவர் தொடர் (Trimbakeshwar Range) மகாராட்டிர மாநிலத்தில் நாசிக்கில் மேற்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகும். இது நாசிக்கிலிருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் தென்மேற்கு திசையில் அமைந்துள்ளது.[1] பிரம்மகிரி மலையின் சேண வடிவிலான தாழ்வுப் பகுதி, இப்பகுதியினை பாதுகாக்கின்றது. திரியம்பாக்கு நகரத்தின், திரியம்பகேசுவரர் சிவன் கோயிலுக்கு இந்து பக்தர்கள் பெரும் அளவில் வருகை புரிகின்றனர். இந்தியாவின் இரண்டாவது நீளமான ஆறான கோதாவரி, இத்தொடரின் வட திசையில் உற்பத்தியாகின்றது. இதன் தென் திசையில் உள்ள மலைகளில் அடர்ந்த காடுகள் காணப்படுகின்றன.[1] மும்பை நகரத்தின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் மேல் வைடார்னா நீர்தேக்கத்தின், நீர்ப்பிடிப்புப் பகுதியாகவும் இப்பகுதி இருக்கிறது. இத்தொடரில் அஞ்சநேரி மலை அமைந்திருக்கிறது. குழப்பங்களைத் தவிப்பதற்காக இத்தொடர் திரியம்பாகு-அஞ்சநேரி என்றும் அழைக்கப்படுகிறது.
தக்காண பீடபுமியின் மேற்கு முனையில் இத்தொடர் அமைந்துள்ளது.எரிமலைப்பாறைகள் இத்தொடரிலிருப்பதால், இது தக்காண பொறி என்றும் அழைக்கப்படுகிறது.[2] T NH848 மூலம் நகரத்திலிருந்து, இதம்மலைத்தொடரினை அடையலாம்.
பெயர் | உயரம் (மீ) |
---|---|
பிரம்மகிரி | 1,295 |
அஞ்சநேரி | 1,280 |
கரிகர்[3] | 1,120 |
பாசுகர்காத் | 1,086 |
திரிங்கால்வாடி | 987 |
கார்காத் | 962 |
தோரியா | 926 |
வாலவிகிர் | 916 |
காவுனெய் | 914 |