திரிவேதி (Trivedi) என்பது இந்தியாவின் வடக்கு மற்றும் மேற்கிந்தியப் பகுதியின் குடும்பப் பெயர்களுள் ஒன்றாகும்.[1] நான்கு வேதங்களில் மூன்றில் (இவர் பிறந்த வேதக் கிளை உட்பட) தேர்ச்சி பெற்றவர் என்பதை இது பிரதிபலிக்கிறது. சமசுகிருதத்தில் திரிவேதி என்றால் 'மூன்று வேதங்களை அறிந்தவர்', திரி = 'மூன்று' + வேதம் (புனித) ’அறிவு', வேதி = 'பார்க்க' என்று பொருள். இதே போன்ற குடும்பப் பெயர்கள் சதுர்வேதி (நான்கு வேதங்களை அறிந்தவர்) மற்றும் திவிவேதி (இரண்டு வேதங்களை அறிந்தவர்) என வழங்கப்படுகின்றன. வட இந்தியாவின் சில பகுதிகளில் இவை திரிபாதி மற்றும் திவாரி என்றும் அழைக்கப்படுகின்றன.
திரிவேதி என்றால் 'மூன்று வேதங்களை அறிந்தவர்' என்பது பொதுவான அனுமானம் என்றாலும், வாய்வழி இந்து மரபுக்கு மாற்று விளக்கம் உள்ளது. சமற்கிருதத்தில், திரி = 'மூன்று' மற்றும் வேதி = 'பார்க்க'. எனவே, ஒரு திரிவேதி என்பது 'மூன்று மடங்கு பார்வை' அல்லது கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைப் பார்க்கக்கூடிய ஒருவர் என்றும் பொருள்படுகின்றது. ஒரு திரிவேதியானது காலத்தின் அதிபதி மற்றும் கடந்த காலத்தைப் பார்க்கவும் எதிர்காலத்தையும் கணிக்க முடியும் என்பதே ஆன்மீகக் கருத்து. திரிவேதி ஒரு தலைசிறந்த வரலாற்றாசிரியர் என்பது மிகவும் நடைமுறை விளக்கம். வரலாற்றை நன்கு அறிந்தவர் மற்றும் எதிர்காலத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் முடிவுகளுக்குப் பொதுமக்களுக்குச் சிறந்த முறையில் வழிகாட்டக்கூடியவர் திரிவேதி என்பதும் கருத்தாகும்.
ஒரு நபர் கற்கக்கூடிய வேதங்களின் எண்ணிக்கைக்கு வரம்பு இல்லை, எனவே ஒரு துவிவேதி அல்லது திரிவேதி நான்கு வேதங்களையும் கற்க முடியவில்லை என்பதற்கு எந்த காரணமும் இல்லை. ஆனால், இது மூன்று வேதங்களின் நிபுணத்துவத்தைப் பற்றியது. இம்மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதையும் வேதங்களைக் கற்கவும் பயிற்சி செய்யவும் செலவழித்தனர்.
திரிவேதி என்பது ஓர் இந்தியப் பிராமண குடும்பப்பெயர். இந்தியாவில், உத்தரப்பிரதேசம், குசராத்து மற்றும் மகாராட்டிராவில் திரிவேதி குடும்பப்பெயர் பொதுவாகக் காணப்படுகிறது. பண்டைய இந்தியாவில், பிராமணர்களின் நிபுணத்துவம் தேவைப்படும் இடத்தைப் பொறுத்துப் பரந்த பிராந்தியங்களில் இவர்களது நடமாட்டம் அதிகமாக இருந்தது. இந்த நேரத்தில், இந்தியாவில் பெரும்பாலான மக்கள் சமற்கிருதம் பேசினர். எனவே ஒரு திரிவேதி எந்த மொழித் தடையும் இல்லாமல் பிராந்தியங்களுக்கு இடையில் எளிதாகச் செல்ல முடிந்தது. சமற்கிருதத்திலிருந்து நவீனக் காலத்தின் உள்ளூர் மொழிகள் பரிணமித்ததால், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் வசிக்கும் ஒரு திரிவேதி அந்த மொழியைத் தழுவினார்.
2014ஆம் ஆண்டு நிலவரப்படி, திரிவேதி என்ற குடும்பப்பெயருடன் உலகில் தோராயமாக 112,129 பேர் உள்ளனர். இந்தியாவில் வசிப்பவர்கள் இவர்களில், தோராயமாக 88.6% பேர். பின்வரும் இந்திய மாநிலங்களில் திரிவேதி என்ற குடும்பப்பெயருடன் (அடைப்புக்குறிக்குள் மக்கள் தொகையுடன்) அதிக எண்ணிக்கையில் தனிநபர்கள் உள்ளனர்:[2]