திருக்குறுங்குடி

திருக்குறுங்குடி
திருக்குறுங்குடி
அமைவிடம்: திருக்குறுங்குடி, தமிழ்நாடு , இந்தியா
ஆள்கூறு 8°26′10″N 77°33′55″E / 8.436248°N 77.565279°E / 8.436248; 77.565279
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் திருநெல்வேலி
வட்டம் நாங்குநேரி
ஆளுநர் ஆர். என். ரவி[1]
முதலமைச்சர் மு. க. ஸ்டாலின்[2]
மாவட்ட ஆட்சியர் கா. ப. கார்த்திகேயன், இ. ஆ. ப [3]
மக்கள் தொகை

அடர்த்தி

9,342 (2011)

623/km2 (1,614/sq mi)

நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)
பரப்பளவு

உயரம்

15 சதுர கிலோமீட்டர்கள் (5.8 sq mi)

141 மீட்டர்கள் (463 அடி)

இணையதளம் www.townpanchayat.in/thirukkurungudi


திருக்குறுங்குடிக் கோயில் வாயில்
திருக்குறுங்குடி கோயில்

திருக்குறுங்குடி (ஆங்கிலம்:Tirukkurungudi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி வட்டம், களக்காடு ஊராட்சி ஒன்றியத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.

அமைவிடம்

[தொகு]

இது திருநெல்வேலியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்; அருகமைந்த வள்ளியூர் தொடருந்து நிலையம் 14 கிமீ தொலைவிலும்; சேரன்மாதேவியிலிருந்து 40 கிமீ தொலைவிலும்,நாகர்கோயில் 36 கிமீ தொலைவிலும் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

[தொகு]

15 சகிமீ பரப்பும், 15 வார்டுகளும், 61 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி)க்கும், திருநெல்வேலி மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3159 வீடுகளும், 9342 மக்கள்தொகையும் கொண்டது.[5]

சிறப்புகள்

[தொகு]

இது ஒரு பழமையான ஊர். இங்கு ஆழ்வார்கள் பாடிய 108 திருப்பதிகங்களில் ஒன்றான வைஷ்ணவ நம்பி - குறுங்குடிவல்லி (அழகிய நம்பிராயர்) வைணவ பெருமாள் கோயில் உள்ளது. இது தான் இந்தியாவின் தலைசிறந்த தொழில் அதிபர் டி. வி. சுந்தரம் அய்யங்கார் (T.V.S) பிறந்த ஊர். பண்ணையார் திரு.அருணாச்சலம் பிள்ளை பிறந்த ஊர்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. 2015. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". tn.gov.in. தமிழ்நாடு அரசு. பார்க்கப்பட்ட நாள் நவம்பர் 3, 2015.
  4. திருக்குறுங்குடி பேரூராட்சியின் இணையதளம்
  5. திருக்குறுங்குடி பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்

வெளி இணைப்புகள்

[தொகு]