ரயில்வே கோட்ட தலைமையகம் | |
கண்ணோட்டம் | |
---|---|
தலைமையகம் | திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு, இந்தியா |
வட்டாரம் | தமிழ்நாடுயும், புதுச்சேரியும் |
செயல்பாட்டின் தேதிகள் | 16 மே 1956 | –தற்போது வரை
முந்தியவை | தென் இந்திய ரயில்வே கம்பெனி |
தொழில்நுட்பம் | |
தட அளவி | 1,676 மிமீ (5 அடி 6 அங்) |
முந்தைய அளவி | 1,000 மிமீ (3 அடி 3 3⁄8 அங்) |
மின்மயமாக்கல் | 25,000 வோல்ட், 50 Hz |
நீளம் | 1026.55 கிலோமீட்டர் |
Other | |
இணையதளம் | www |
திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்டம் (ஆங்கில மொழி: Tiruchirappalli railway division) என்பது இந்திய இரயில்வேயால் நிர்வகிக்கப்படும் தென்னக இரயில்வே மண்டலத்தின் அங்கமாக விளங்குகிறது. இதன் தலைமையகம் திருச்சிராப்பள்ளியில் உள்ளது. இந்த ரயில்வே கோட்டம் டெல்டா பகுதியின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கும் மத்திய தமிழகத்திற்கும் சேவை புரிகிறது.[1][2]
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென ரூ. 4100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[3][4][5][6][7]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் பின்வரும் நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, தஞ்சாவூர், விழுப்புரம், மயிலாடுதுறை, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, அரியலூர், சிதம்பரம், காரைக்கால், மன்னார்குடி, சிறீரங்கம், திருப்பாதிரிப்புலியூர், திருவாரூர், வேலூர் கண்டோன்மன்ட், லால்குடி, மற்றும் போளூர் ஆகியன ஆகும்.[8][9][10][11]
{{cite book}}
: Invalid |ref=harv
(help)