திருச்சூர் நகர மண்டபம் | |
---|---|
Imposing structure of Thrissur Town Hall | |
பொதுவான தகவல்கள் | |
வகை | நகர மண்டபம் |
கட்டிடக்கலை பாணி | இந்தோ சாரசெனிக் கட்டடக்கலை |
இடம் | இந்தியா கேரளம் திருச்சூர் |
முகவரி | அரண்மனை சாலை, திருச்சூர் கேரளம் |
உரிமையாளர் | திருச்சூர் மாநகராட்சி |
வடிவமைப்பும் கட்டுமானமும் | |
கட்டிடக்கலைஞர்(கள்) | வி. கே. அரவந்தகிருஷ்ண மேனன் |
திருச்சூர் நகர மண்டபம் (Thrissur Town Hall) என்பது இந்தியாவின், கேரள மாநிலத்தின் திருச்சூர் நகரில் அமைந்துள்ள ஒரு கட்டடமாகும். ஆர். கே. சண்முகம் செட்டியார் திவானாக இருந்தபோது இது கட்டப்பட்டது. இங்கு தொல்லியல் அருங்காட்சியகம் மற்றும் படக் காட்சியகம் உள்ளது. இங்கு கேரளத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் சுவரோவியங்கள் நகலெடுக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் பார்க்க வேண்டியவை பழைய கையெழுத்துப்படிளின் தொகுப்பாகும், அவை ஓலகிரந்தங்கள் என்று அழைக்கப்படும் பனை ஓலைச்சுவடிகளாகும். [1] [2] இந்த நகர மண்டபமானது அப்போதைய இந்தியப் பேரரசர் ஜார்ஜ் மன்னரின் வெள்ளி விழாவிழா ஆண்டின் நிமித்தமாக கட்டப்பட்டது. இந்த கட்டிடக்கலை விக்டோரியன் பாணியில் ஒரு புல்வெளியும், தோட்டத்துடன் உள்ளது.