திருத்தம் | |
---|---|
இயக்கம் | பொன்ராமன் |
தயாரிப்பு | சுனி ஹரி |
கதை | பொன்ராமன் |
இசை | பிரவீண் மணி |
நடிப்பு |
|
ஒளிப்பதிவு | ஜீவா |
படத்தொகுப்பு | பி. எஸ். வாசு சலீம் |
கலையகம் | போப்ரோ பிலிம்ஸ் |
வெளியீடு | 14 செப்டம்பர் 2007 |
ஓட்டம் | 125 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
திருத்தம் (Thirutham) என்பது 2007 ஆம் ஆண்டு வெளியான இந்திய தமிழ் காதல் பரபரப்புத் திரைப்படமாகும். பொன்ராமன் இயக்கிய இப்படத்தில் ஹரிகுமார், பிரியங்கா நாயர், மான்சி பிரிதம் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர். மேலும் இதில் நாசர், ஆதித்யா, எம். எசு. பாசுகர், சுஜா வருணீ, பிரியா, விஜய் பாபு, பாரதி ஆகியோர் துணை வேடங்களில் நடித்துள்ளனர். சுனி ஹரி தயாரித்த இப்படத்திற்கு, பிரவீண் மணி இசை அமைத்துள்ளார். படமானது 14 செப்டம்பர் 2007 அன்று வெளியானது.[1]
போப்ரோ பிலிம்ஸ் பதாகையின் கீழ் தயாரிக்கபட்ட திருத்தம் படத்தின் வழியாக பொன்ராமன் இயக்குநராக அறிமுகமானார். தூத்துக்குடி (2006) படத்திற்குப் பிறகு இரண்டாவது முறையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஹரிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெயில் படப் புகழ் பிரியங்கா நாயர், புதுமுகம் மான்சி பிரிதம் ஆகியோர் படத்தில் நடிக்கத் தேர்வு செய்யப்பட்டனர். ஜீவா ஒளிப்பதிவை மேற்கொண்டார். தூத்துக்குடி படத்துக்குப் பிறகு, ஹரிகுமாரும் இசை அமைப்பாளர் பிரவீன் மணி என இருவரும் இந்த படத்தில் ஒன்றாக பணியாற்றினர்.[2][3][4][5]
திரைப்பட பின்னணி இசை, பாடல் இசை ஆகியவற்றை இசையமைப்பாளர் பிரவீண் மணி அமைத்தார். இசைப்பதிவில் ஐந்து பாடல்கள் உள்ளன.[6][7] ரெடிப்.காமின் சரஸ்வதி சீனிவாஸ் பாடல்களுக்கு 5 நட்சத்திரங்களில் 2 நட்சத்திர மதிப்பீட்டை அளித்தார்.[8]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "பாதை தெரிகிறது" | திப்பு | 4:37 | |||||||
2. | "படவா கைய புடிடா" | ஜாசி கிஃப்ட், அனுராதா ஸ்ரீராம் | 4:12 | |||||||
3. | "லாபம் யோகம்" | கார்த்திக் | 4:05 | |||||||
4. | "காதல் கண்மணியே" | உண்ணிமேனன், சித்ரா | 4:06 | |||||||
5. | "சிடுமூஞ்சி தேவதையே" | சீனிவாஸ், கல்யாணி | 3:47 | |||||||
மொத்த நீளம்: |
20:47 |
இந்த படம் 14 செப்டம்பர் 2007 அன்று வேறு ஐந்து படங்களுக்கு போட்டியாக வெளியிடப்பட்டது.[9]
கோலிவுட்டுடே.நெட் ஹரிகுமாரின் நடிப்பைப் பாராட்டியதுடன், இந்தப் படத்தை "நல்ல கதைக்களத்துடன் கூடிய சராசரி படம்" என்று அழைத்தது.[10] ஒரு விமர்சகர் படத்தில் முன்னணி ஜோடியின் நடிப்பைப் பாராட்டினார். அதேசமயம் படத்தின் திரைக்கதையை விமர்சித்தார்.[11] மற்றொரு விமர்சகர் எழுதினார், "ஹரி பெரும்பாலான பாத்திரங்களை நன்கு ஏற்று நடிக்கிறார்", மேலும் இந்த படத்தை "சராசரிக்குக்கும் கீழே" என்று மதிப்பிட்டார். இந்த படத்திற்கு நான் அவநில்லை (2007), மன்மதன் (2004), கல்யாணராமன் (1979) ஆகியவற்றுடன் ஒற்றுமைகள் இருப்பதையும் அவர் குறிப்பிட்டார்.[12]
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)