திருத்துறைப்பூண்டி | |||||||
ஆள்கூறு | 10°32′25″N 79°38′07″E / 10.54030195°N 79.63523624999999°E | ||||||
நாடு | இந்தியா | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | திருவாரூர் | ||||||
வட்டம் | திருத்துறைப்பூண்டி வட்டம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | தி. சாருஸ்ரீ, இ. ஆ. ப [3] | ||||||
நகராட்சி தலைவர் | கவிதா பாண்டியன் | ||||||
மக்கள் தொகை | 24,404 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
குறியீடுகள்
|
திருத்துறைப்பூண்டி (ஆங்கிலம்: Thiruthuraipoondi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும், நகராட்சியும் ஆகும். இவ்வூருக்கு வில்வாரண்ய க்ஷேத்திரம் என்னும் பெயர் உண்டு.[4] திருத்துறைப்பூண்டி நகரம் முந்தைய தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, 24 நகராட்சி மன்ற உறுப்பினர்களையும், 6,263 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் மக்கள்தொகை 24,404 ஆகும். அதில் 11,985 ஆண்களும், 12,419 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் எழுத்தறிவு 88.6% மற்றும் பாலின விகிதம் ஆண்களுக்கு, 1,036 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 2324 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 969பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 7,248 மற்றும் 450 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 90.41%, இசுலாமியர்கள் 6.36%, கிறித்தவர்கள் 3.09% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.[5]
{{cite book}}
: Check date values in: |date=
(help)