இக்கட்டுரை |
அகனன் - அகனள் - இருபால்சேர்க்கை - திருநங்கை (அ.அ.ஈ.தி) தொடரைச் சேர்ந்தது |
---|
![]() |
பாலின திசையமைவு |
வரலாறு (en) |
பண்பாடு |
சமூக நடத்தை |
![]() |
திருநங்கைகளின் உரிமைகள் இயக்கம் (Transgender rights movement) என்பது திருநங்கைகளின் உரிமைகளை ஊக்குவிப்பதற்காகவும், வீடு, வேலைவாய்ப்பு, பொது இடவசதி, கல்வி மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பான திருநங்கைகளுக்கு எதிரான பாகுபாடு மற்றும் வன்முறையை அகற்றுவதற்கான ஒரு இயக்கமாகும். பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படாது ஒரு நபரின் தற்போதைய பாலின அடையாளத்திற்கேற்ப அடையாள ஆவணங்களில் மாற்றங்களை அனுமதிக்க சில அதிகார வரம்புகள் அனுமதிக்கிறது . [1]
ஒரு திருநங்க இயக்கத்தின் எல்லைகளை அடையாளம் காண்பது சில விவாதத்திற்குரிய விடயமாகும். 1952 ஆம் ஆண்டில் வர்ஜீனியா பிரின்ஸ், ஒரு ஆண் குறுக்கு அடை அணியும் நபர், மற்றவர்களுடன் சேர்ந்து, டிரான்ஸ்வெஸ்டியா: ஜர்னல் ஆஃப் தி அமெரிக்கன் சொசைட்டி ஃபார் ஈக்வலிட்டி ஆஃப் டிரஸ் என்பதனை ஆரம்பத்ததின் மூலம் ஒரு குறியீட்டு அரசியல் அடையாளத்திற்கான சான்றுகள் தென்படத் தொடங்கியது . [2] இந்த வெளியீடு அமெரிக்காவில் திருநங்கைகள் உரிமை இயக்கத்தின் தொடக்கமாக சிலரால் கருதப்படுகிறது, இருப்பினும் "திருநங்கை" என்ற சொல் பொதுவான பயன்பாடுகளுக்கு வருவதற்கு பல வருடங்கள் ஆகும் என நம்பப்படுகிறது. [2]
ஸ்டோன்வால் கலவரத்திற்கு முந்தைய ஆண்டுகளில், ந,ந,ஈ,தி உரிமைகளுக்கான பிற நடவடிக்கைகள் நடந்தன .
ஆரம்பகாலதில், ஆனால் பரவலாக அறியப்படாத செயலாக இருப்பது, டவுன்டவுன் லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த கூப்பர் டூ-நட்ஸ் கலவரம் ஆகும். [3] கூப்பர் டூ-நட்ஸில் அகனள், ஓரினச் சேர்க்கையாளர்கள் மற்றும் திருநங்கைகள் ஆகியோர் லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையினரால் அடிக்கடி துன்புறுத்தலுக்கு ஆளானர்கள். அவர்கள் ஜான் ரெச்சி உட்பட மூன்று பேரை காவல் துறையினர் கைது செய்த பிறகு இந்தப் போராட்டம் துவங்கியது. போராட்டக்காரர்கள் காவல் துறையினரை டோனட்ஸ் மற்றும் குளம்பிக் கோப்பைகளால் அடிக்கத் தொடங்கினர். லாஸ் ஏஞ்சல்ஸ் காவல் துறையினர் தங்களுக்கு அதிக காவல் துறையினர் பாதுகாப்பாக வர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும், பல கலவரக்காரர்களை கைது செய்தனர். ரெச்சி மற்றும் மற்ற இரண்டு முதன்மை கைதிகள் தப்பித்தனர்.
ஆகஸ்ட் 1966 இல் சான் பிரான்சிஸ்கோவின் டெண்டர்லோயின் மாவட்டத்தில் காம்ப்டனின் உணவு விடுதி கலவரம் ஏற்பட்டது. இந்த சம்பவம் ந,ந,ஈ,தி தொடர்பான முதல் போராட்டமாக அமெரிக்க வரலாற்றில் பதிவானது.[4] கூப்பர் கலவரம் போன்ற ஒரு சம்பவத்தில், விலைமாது மற்றும் திருநங்கை சமூக மக்கள் காவல் துறையினரின் துன்புறுத்தலுக்கு எதிராக போராடினர். ஒரு திருநங்கை பெண் காவல்துறை அதிகாரி மீது குளம்பியை வீசி கைது செய்வதை எதிர்த்தபோது, மற்றவர்களும் குளம்பியினை சாலையில் கொட்டி காவல் துறையினருக்கு எதிராக தங்களது எதிர்ப்பினை தெரிவித்து போராடினர். [5] அடுத்த இரவில், வழக்கமான பாதுகாவலர்கள் தெரு வன்முறையாளர்கள், டெண்டர்லோயின் தெரு மக்கள் மற்றும் ந,ந,,ஈ,தி சமூகத்தின் மற்ற உறுப்பினர்கள் காவல்துறையின் வன்முறைக்கு எதிரான நிலைப்பாட்டில் இணைந்தனர். [6] இது சான் பிரான்சிஸ்கோவில் திருநங்கை செயல்பாட்டின் தொடக்கத்தைக் குறித்தது. [7]
டிசம்பர் 31, 1993 அன்று, பிராண்டன் டீனா என்ற ஒரு திருநம்பி அவரது இரண்டு நண்பர்களுடன் நெப்ராஸ்காவில் கொலை செய்யப்பட்டார். இந்த கொலை 1999 ஆம் ஆண்டு ஹிலரி ஸ்வாங்க் பிராண்டன் டீனாவாக நடித்த பாய்ஸ் டோன்ட் க்ரை திரைப்படத்தில் ஆவணப்படுத்தப்பட்டது. [8]