திருநீர்மலை | |
ஆள்கூறு | |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | செங்கல்பட்டு |
வட்டம் | பல்லாவரம் |
ஆளுநர் | ஆர். என். ரவி[1] |
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] |
மாவட்ட ஆட்சியர் | ச. அருண்ராஜ், இ. ஆ. ப |
மக்கள் தொகை • அடர்த்தி |
30,702 (2011[update]) • 6,396/km2 (16,566/sq mi) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு | 4.80 சதுர கிலோமீட்டர்கள் (1.85 sq mi) |
திருநீர்மலை (ஆங்கிலம்:Thiruneermalai), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் வட்டத்தில் இருக்கும் தாம்பரம் மாநகராட்சியின் ஒரு பகுதியாகும். மேலும் இது சென்னையின் புறநகர் பகுதி ஆகும். 108 வைணவத் திவ்விய தேசங்களில் ஒன்றான திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில் இங்கு அமைந்துள்ளது.
3 நவம்பர் 2021 அன்று இந்த பகுதியானது தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.
திருநீர்மலை அருகே 4-5 கி.மீ. தொலைவில் பல்லாவரம், பம்மல், குன்றத்தூர் அமைந்துள்ளது. இது காஞ்சிபுரத்திலிருந்து 56 கி.மீ. தொலைவில் உள்ளது.
4.80 சகி.மீ. பரப்பும், 216 தெருக்களையும் கொண்ட இப்பகுதி பல்லாவரம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்டதாகும்.
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பகுதி 7,660 வீடுகளும், 30,702 மக்கள்தொகையும் கொண்டது. மேலும் இப்பகுதியின் எழுத்தறிவு 90.50% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 998 பெண்கள் வீதம் உள்ளனர்.[3]
திருநீர்மலை, ஒரு திவ்வியதேச தலமாகும். இங்குள்ள திருநீர்மலை நீர்வண்ணப்பெருமாள் கோயில், பெருமாள் நீர்வண்ணராக திருநீர் மலையடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார். திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்.[4]