திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)

திருநெல்வேலி மாவட்டம் (Tinnevely District) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்துக்கு உட்பட்ட ஒரு மாவட்டம் ஆகும். இது தற்போதைய தமிழ்நாட்டின் மாவட்டங்களான திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் மாவட்டத்தின் ராஜ பாளையம்,ஸ்ரீவில்லிபுத்தூர்,சிவகாசி,சாத்தூர்,போன்ற தாலுக்காக்களை உள்ளடக்கியது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

1901 ஆம் ஆண்டில், திருநெல்வேலி மாவட்ட மக்கள் தொகையானது 2,059,607 ஆகும். இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் முஸ்லிம் மற்றும் கிறித்தவ மக்களாவர்.

நிர்வாகம்

[தொகு]

இந்த மாவட்டமானது நான்கு நகராட்சிகளைக் கொண்டு இருந்தது. அவை: திருநெல்வேலி, ஸ்ரீவில்லிப்புத்தூர், தூத்துக்குடி, பாளையங்கோட்டை ஆகியவை ஆகும்.

துணை கோட்டம்

[தொகு]

1901 ஆம் ஆண்டு நிர்வாக வசதிக்காக திருநெல்வேலி மாவட்டம் மூன்று துணை கோட்டங்களாக பிரிகப்பட்டது அவை
திருநெல்வேலி துணை கோட்டம்:

  • திருநெல்வேலி வட்டம்
  • சங்கரநயினார்கோவில் வட்டம்
  • ஸ்ரீ வில்லிபுத்தூர் வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது ஆகும்

தூத்துக்குடி துணை கோட்டம்:

  • ஸ்ரீவைகுண்டம் வட்டம்
  • திருச்செந்தூர் வட்டம்
  • கோவில்பட்டி வட்டம் ஆகியவற்றை கொண்டது

சேரன்மகாதேவி துணை கோட்டம்:

  • அம்பாசமுத்திரம் வட்டம்
  • நாங்குநேரி வட்டம்
  • தென்காசி வட்டம் ஆகிய வட்டங்களை உள்ளடக்கியது

வட்டங்கள்

[தொகு]
  • அம்பாசமுத்திரம் (பரப்பு:1,250 சதுர கிலோமீட்டர்கள் (481 sq mi); தலைமையகம்: அம்பாசமுத்திரம்)
  • நாங்குனேரி (Area:1,900 சதுர கிலோமீட்டர்கள் (730 sq mi); தலைமையகம்: நாங்குனேரி)
  • ஒட்டப்பிடாரம் (Area:2,780 சதுர கிலோமீட்டர்கள் (1,072 sq mi); தலைமையகம்: ஒட்டப்பிடாரம்)
  • சங்கரன்கோவில் (Area:2,000 சதுர கிலோமீட்டர்கள் (770 sq mi); தலைமையகம்: சங்கரநயினார் கோவில்)
  • சாத்தூர் (Area:1,500 சதுர கிலோமீட்டர்கள் (560 sq mi); தலைமையகம்: சாத்தூர்)
  • ஸ்ரீவைகுண்டம் (Area:1,400 சதுர கிலோமீட்டர்கள் (542 sq mi); தலைமையகம்: ஸ்ரீவைகுண்டம்)
  • ஸ்ரீவில்லிபுத்தூர் (Area:1,520 சதுர கிலோமீட்டர்கள் (585 sq mi); தலைமையகம்: ஸ்ரீவிலிபுத்தூர்)
  • தென்காசி (Area:1,250 சதுர கிலோமீட்டர்கள் (481 sq mi); தலைமையகம்: தென்காசி)
  • திருநெல்வேலி (Area:850 சதுர கிலோமீட்டர்கள் (328 sq mi); தலைமையகம்: திருநெல்வேலி)