திருபாய் தாக்கர் | |
---|---|
![]() குசராத் விசுவகோசு அறக்கட்டளை அலுவலகத்தில் தாக்கர், செப்டம்பர் 2012 | |
பிறப்பு | கோடினார், குசராத்து, இந்தியா | 27 சூன் 1918
இறப்பு | 22 சனவரி 2014 அகமதாபாது, குசராத்து | (அகவை 95)
தொழில் | Author |
மொழி | குசராத்தி |
தேசியம் | ![]() |
கல்வி நிலையம் | எல்பின்ஸ்டோன் கல்லூரி (1936–1939; இளங்கலை) |
குறிப்பிடத்தக்க விருதுகள் |
|
கையொப்பம் | |
![]() | |
கல்விப் பின்னணி | |
ஆய்வு | 'மணிலால் நபுபாய்: சாகித்திய சாதனா' (1956) |
முனைவர் பட்ட நெறியாளர் | ராம்நாராயண் விசுவநாத் பதக் |
கல்விப் பணி | |
முனைவர் பட்ட மாணவர்கள் |
|
திருபாய் பிரேம்சங்கர் தாக்கர் ( Dhirubhai Premshankar Thaker) (27 ஜூன் 1918 - 22 ஜனவரி 2014) ஒரு இந்திய குசராத்தி எழுத்தாளர் ஆவார். இவர் குசராத்தி மொழியின் 25-தொகுதி கலைக்களஞ்சியமான குசராத்தி விசுவகோசு என்பதை உருவாக்கியதில் மிகவும் பிரபலமானவர்.[1]
27 ஜூன் 1918 அன்று இந்தியாவின் குசராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்திலுள்ள கோடினாரில் பிரேம்சங்கர் தாக்கர் மற்றும் கோமதி பெஹென் ஆகியோருக்கு திருபாய் பிரேம்சங்கர் எனப் பிறந்தார். இவரது தந்தை கிராமக் கணக்காளராக இருந்தார். மேலும் அவர் இலக்கியம் வாசிப்பதில் ஆர்வம் கொண்டிருந்தார். அவர் அகமதாபாது மாவட்டத்தில் உள்ள விராம்காம் என்ற ஊரைச் சேர்ந்தவர். [2]
திருபாய் பிரேம்சங்கர், தனது ஆரம்பக் கல்வியை கோடினார் மற்றும் சானஸ்மாவில் முடித்தார். இடைநிலைக் கல்வியை சானாஸ்மா மற்றும் சித்தபூரில் முடித்தார். 1934 இல் சித்தப்பூரில் உள்ள எல். எஸ். உயர்நிலைப் பள்ளியில் மெட்ரிகுலேசனில் சமசுகிருதம் மற்றும் அறிவியல் பாடங்களைப் படித்தார். 1939 இல் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் குசராத்தி மற்றும் சமசுகிருதத்தில் இளங்கலை பட்டமும், 1941 இல் குசராத்தியில் அதே கல்லூரியில் முதுகலை பட்டமும் பெற்றார். 1938 இல், மும்பை பல்கலைக்கழகம் ஒகனிசாமி சதினி பஷ்சிம் பாரத்னி தர்மிக் சலவலோ (19 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் மத நடவடிக்கைகள்) என்ற இவரது ஆராய்ச்சிப் பணிக்காக எம். எம் பரமானந்த் பரிசை வழங்கியது.[2]
1960 வரை குசராத் கல்லூரியில் பேராசிரியராக இருந்தார். 1956 ஆம் ஆண்டில், குசராத் கல்லூரியில் ராம்நாராயண் வி. பதக்கின் வழிகாட்டுதலின் பேரின் மணிலால் திவேதியின் வாழ்க்கை மற்றும் படைப்புகள் பற்றிய ஆராய்ச்சிப் பணியான மணிலால் நபுபாய்: சாகித்ய சாதனா என்பதை அராய்ச்சி செய்து தனது முனைவர் பட்டம் பெற்றார். 1960 இல் மோதாசா கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் அங்கிருந்து ஓய்வு பெற்றார். 1999 முதல் 2001 வரை குசராத்தி சாகித்ய பரிசத்தின் தலைவராகவும் பணியாற்றினார்.
இவர் தொழில் ரீதியாக விரிவுரையாளராக இருந்தார். விமர்சனம், கட்டுரைகள், ஆராய்ச்சி மற்றும் நாடகங்களை எழுதினார்.[1] விமர்சனத்தில் பத்துப் படைப்புகள், ஏழு கட்டுரைத் தொகுப்புகள், இரண்டு ஆய்வுப் படைப்புகள், சுயசரிதை உட்பட மூன்று சுயசரிதைகள் ஆகியவற்றை எழுதியுள்ளார். மேலும் ஒரு வாழ்க்கை வரலாற்று நாடகம், இரண்டு குழந்தைகள் நாடகங்கள், ஒரு பயணக் குறிப்பு மற்றும் இரண்டு மொழிபெயர்ப்புகளையும் எழுதியுள்ளார். நான்கு ஆய்வுப் படைப்புகள், பதினாறு இலக்கியப் படைப்புகள், ஒன்பது தொகுப்புகள் (மற்றவற்றுடன்) மற்றும் குசராத்தி இலக்கியத்தின் வரலாறு ஆகியவற்றைத் திருத்தியுள்ளார்.[3] மணிலால் திவேதியின் வாழ்க்கை வரலாற்றை மணிலால் நபுபாய் : ஜீவன்ரங் என்ற தலைப்பில் எழுதினார்.[4] மணிலால் திவிவேதியின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்ட உஞ்சோ பர்வத், உண்டி கின் ( 'உயர்ந்த மலை, குகைப் பள்ளத்தாக்கு') என்ற சுயசரிதை நாடகத்தை 1993 இல் எழுதினார். இதற்கு பதுபாய் உமர்வாடியா மையத்தால் சிறந்த நாடகம் என்ற பரிசு வழங்கப்பட்டது.[5] பாப்லோ நெருடாவின் நினைவுகளை சத்யானி முகோமுகா : பாப்லோ நெருதானா 'மெமோரிஸ்' நோ அனுவாடா (2010) என்ற பெயரில் மொழிபெயர்த்தார்.[6]
25,000 பக்கங்கள் மற்றும் 23,000 உள்ளீடுகளைக் கொண்ட குசராத்தி மொழியின் 25-தொகுதி கலைக்களஞ்சியமான குசராத்தி விசுவகோசில் பணிபுரிய 1700 பாட நிபுணர்களை ஒன்று திரட்டினார். [1]
இவர் 1994 இல் ரஞ்சித்ரம் சுவர்ண சந்திரக் மற்றும் 2012 இல் நர்மத் சுவர்ண சந்திரக் போன்ற குசராத்தி மொழியின் உயரிய இலக்கிய விருதுகளைப் பெற்றவர்.[1][7] 1998 இல் சாகித்ய கௌரவ் புரஸ்கார் விருது பெற்றார் [2]
இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 25 ஜனவரி 2014 அன்று இவருக்கு பத்ம பூசண் கௌரவம் வழங்கப்பட்டது.[8][9]
24 ஜனவரி 2014 அன்று அகமதாபாத்தில் இறந்தார்.[1][3]
2013 முதல் அகமதாபாத்தின் குசராத் விசுவகோசு அறக்கட்டளையானது இவரது நினைவாக, திருபாய் தக்கார் சவ்யசாச்சி சரசுவத் விருதினை ஆண்டுதோறும் வழங்கிவருகிறது.[10]